Athalakkai Benefits in Tamil அதலைக்காய் பயன்கள் Athalakkai Payangal அதலைக்காய் நன்மைகள் Athalakkai Nanmaigal Momordica cymbalaria Benifits in Tamil

0

Athalakkai Benefits in Tamil அதலைக்காய் பயன்கள் Athalakkai Payangal அதலைக்காய் நன்மைகள் Athalakkai Nanmaigal Momordica cymbalaria Benifits in Tamil. அதலைக்காய் விதை, அதலைக்காய் பொரியல், அதலைக்காய்: சர்க்கரை நோய், புற்றுநோய், சிறுநீரக செயல்பாடு, எடை குறைப்பு, எய்ட்ஸ் வரை அனைத்தையும் குணப்படுத்தும்! Athalakkai Benefits in Tamil.

Athalakkai Benefits in Tamil

நம் மூதாதையர் ஆரோக்கியமான உணவு முறையினை பின்பற்றி உடல் ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்புடன் வாழ்ந்தார்கள். ஆனால் நாம் இன்றைய காலத்தில் முப்பது, நாற்பது வயதுகளிலியே மாரடைப்பு, சர்க்கரைநோய் போன்ற நோய்களுக்கு உள்ளாவதுடன் நம் உயிரையும் மாய்த்துக் கொள்கின்றோம்

இயற்கையானது நமக்கு வாரி தந்த கொடைகளை நாம் வீண் செய்கிறோம். இதனால் நம் வருமானத்தில் பாதி மருத்துவ செலவிற்கே செல்கிறது. ஆனால் நம் பழைய சந்ததியினர் இயற்கையின் மகிமையை உணர்ந்து செயற்பட்டார்கள். ஆகையால் ஆங்கில மருத்துவத்தை அவர்கள் நாட வேண்டிய தேவை உண்டாகவில்லை.

அதலைக்காய் என்னும் அரிய அற்புத மருந்து மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான விருதுநகர், மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது.

நம்மில் பலர் அதலைக்காய் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ஒரு காய் போதும் சர்க்கரைநோய், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என எந்த‌ நோயுமே நம்மை நெருங்காது என்று கூறினால் நம்புவீர்களா! நம்பி தான் ஆக வேண்டும்!

இந்தியாவில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த காய் பாகற்காய் வகையை சேர்ந்த ஒரு கொடி தாவரமாகும். இதிலுள்ள சத்துக்கள் நம்மை பலவகையான நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

மழைக்காலம் வந்தால் இது தானாகவே சாலையோரங்களிலும், விளைநிலங்களின் அருகிலும் விளையத்தொடங்கும். யாரும் விளைவிக்க வேண்டிய அவசியமில்லை. இது தென்மாவட்ட விவசாயிகளுக்கு முதலீடே இல்லாமல் இலாபம் தரக்கூடிய பயிராகும்.

இதிலுள்ள சத்துக்கள் முறையே கால்சியம், பொட்டாசியம், நீர்ச்சத்து, புரதம் என இதில் உள்ள சத்துக்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இத்தனை சத்துக்கள் நிறைந்த இதை நாம் கவனிக்காமல் இருப்பது நமது அறியாமை என்றே கூற வேண்டும்.

அதலைக்காயில் பாகற்காயை போன்றே கசப்பு சுவை உள்ளதால் பெரும்பலானோர் இதனை உண்பதில்லை. ஆயினும் இதன் மகிமையை அறிந்தவர்கள் ஒருபோதும் இதை வெறுக்க மாட்டார்கள். இதனை பொரியலாகவோ அல்லது புளி குழம்பாகவோ சமைத்து சாப்பிடலாம். சாம்பாராக வைக்க இயலாது.

பாகற்காயை போன்றே சரியான பக்குவத்தில் சமைத்தால் சுவையிலும், சத்துகளிலும் இதனை மிஞ்ச வேறு காய்கறிகளே இல்லை என்றே கூற வேண்டும்.

சர்க்கரை நோய்க்கு அதலைக்காய்

சர்க்கரை நோயாளிகளுக்கு அதலைக்காய் இயற்கை கொடுத்த வரமாகும். இக் காயின் சதைப்பகுதி இன்சுலின் போல செயல்படக்கூடியது. நமது உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள இன்சுலின் மிகவும் அவசியமானது. அத்துடன் சர்க்கரை நோயை குறைக்கும் மேலும் பல‌ சத்துக்களை கொண்டுள்ளது.

புற்றுநோய்க்கு அதலைக்காய்

இக் காயில் உள்ள‌ சத்துக்கள் புற்றுநோய் செல்கள் இரத்தத்தில் வளர்வதற்கான ஆற்றலை கட்டுப்படுத்துகின்றது. முக்கியமாக இது நமது கணையத்தை பாதுகாப்பதால், இதனை தொடர்ச்சியாக‌ உண்பவர்களுக்கு கணைய புற்றுநோய் வர வாய்ப்புகள் மிகக்குறைவு. அதுமட்டுமின்றி இதில் உள்ள லெய்ச்சின் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, புற்றுநோய் செல்கள் பாதிப்பையும் தடுக்கிறது.

சிறுநீரக செயல்பாடுகளுக்கு அதலைக்காய்

வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கக்கூடியது சிறுநீரக பாதிப்பு. ஒருவேளை உங்களுக்கும் சிறுநீரக பாதிப்பு இருந்தால் இந்த அதலைக்காயை சாப்பிட்டு பாருங்கள்.

எய்ட்ஸ் நோய்க்கு அதலைக்காய்

எய்ட்ஸ் நோய் என்பது நம் இரத்த உள்ள அணுக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து நம் உடலின் பாகங்களை செயல்பட விடாமல் செய்வதே. அதலைக்காய் நம் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்து எய்ட்ஸில் இருந்து பாதுகாக்கிறது.

இதன் மூலம் ஹெச்ஐவி கிருமிகளின் தாக்கம் குறையும். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாப்பிடுவதை தவிர்க்கவே கூடாது. அதலைக்காய் கருக்கலைப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.

எடை குறைப்புக்கு அதலைக்காய்

முன்பே கூறியது போல இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் பசியுணர்வை கட்டுப்படுத்தும், எனவே நீங்கள் இதனை சிறிதளவு சாப்பிட்டாலே பசி அடங்கியது போல் திருப்தியாய் உணருவீர்கள் எனவே நீங்கள் அதிகம் சாப்பிடுவதை இது தடுக்கும்.

அதுமட்டுமின்றி இதில் மிக குறைந்த அளவே கலோரிகள் உள்ளது. ஒரு கப் அதலைக்காயில் 16 கலோரிகள் மட்டுமே இருக்கும். ஆதலால் எடை குறைக்க விரும்புவோர் தங்கள் டயட்டில் முக்கியமாக சேர்க்க வேண்டியது இந்த அதலைக்காய்.

அதலைக்காய் பிரச்சினைகள்

இதில் உள்ள ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால் இதை பறித்தவுடன் சமைக்க வேண்டும். இல்லையெனில் காய்கள் வெடித்துவிடும். இத்தகைய அரிய வகை மூலிகை கிடைப்பது மிகவும் கடினம். நீங்கள் பார்க்க நேர்ந்தால் தவற விட்டு விடாதீர்கள்.

Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

Article By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி! உயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்!
Next articleதூக்கிலிடப்படும் குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் ஏழு தமிழர்கள்! முக்கிய நபர்களின் பெயர் இல்லை?