December 21 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 21

0

Today Special Historical Events In Tamil | 21-12 | December 21

December 21 Today Special | December 21 What Happened Today In History. December 21 Today Whose Birthday (born) | December-21th Important Famous Deaths In History On This Day 21/12 | Today Events In History December 21th | Today Important Incident In History | மார்கழி 21 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 21-12 | மார்கழி மாதம் 21ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 21.12 Varalatril Indru Nadanthathu Enna| December 21 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 21/12 | Famous People Born Today 21.12 | Famous People died Today 21-12.

Today Special in Tamil 21-12
Today Events in Tamil 21-12
Famous People Born Today 21-12
Famous People died Today 21-12

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 21-12 | December 21

சங்கமித்தை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (தேரவாத பௌத்தம்)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 21-12 | December 21

69ல் வெசுப்பாசியான் உரோமைப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான்.
1124ல் இரண்டாம் இனோரியசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1768ல் நேப்பாள இராச்சியம் தோற்றுவிக்கப்பட்டது.
1832ல் எகிப்தியப் படையினர் உதுமானியர்களை கொன்யா பொரில் தோற்கடித்தனர்.
1872ல் சலஞ்சர் ஆய்வுப் பயணம் இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத்தில் இருந்து ஆரம்பமானது.
1902ல் இலங்கையில் பூர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாபிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
1907ல் சிலியப் படையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட குறைந்தது 2,000 சுரங்கத் தொழிலாளர்களைப் படுகொலை செய்தனர்.
1910ல் இங்கிலாந்தில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 344 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1913ல் உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் புதிர் “நியூயோர்க் வேர்ல்ட்” பத்திரிகையில் வெளியானது.
1919ல் அரசியல் எதிர்ப்பாளர் எம்மா கோல்ட்மன் என்ற அமெரிக்கர் உருசியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்.
1923ல் ஐக்கிய இராச்சியமும் நேப்பாளமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
1937ல் உலகின் முதலாவது முழு-நீள இயங்குபடம் சினோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் வெளியிடப்பட்டது.
1941ல் இரண்டாம் உலகப் போர்: தாய்லாந்துக்கும் யப்பானுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1946ல் சப்பான், நான்கைடோ என்ற இடத்தில் 8.1 Mw அளவு நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1963ல் சைப்பிரசில் துருக்கியர்களுக்கு எதிரான போராட்டம் தொடங்கியது.
1965ல் அனைத்துவகை இனத்துவ பாகுப்பாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை அறுமுகப்படுத்தப்பட்டது.
1967ல் உலகின் முதலாவது இருதயமாற்றுச் சிகிச்சை பெற்ற தென்னாபிரிக்காவைச் சேர்ந்த லூயிசு நாசுகான்சுகி என்பவர் சிகிச்சை பெற்று 18 நாட்களின் பின்னர் இறந்தார்.
1968ல் சந்திரனுக்கான மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. புவியீர்ப்பைத் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும்.
1970ல் எப்-14 போர் விமானத்தின் முதலாவது பறப்பு மேற்கொள்ளப்பட்டது.
1973ல் அரபு-இசுரேல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஜெனீவா மாநாடு ஆரம்பமானது.
1979ல் ரொடீசியாவின் விடுதலைக்கான உடன்பாடு லண்டனில் கையெழுத்திடப்பட்டது.
1988ல் இசுக்காட்லாந்தில் லொக்கர்பி என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானத்தில் குண்டு வெடித்ததில் 270 பேர் கொல்லப்பட்டனர்.
1988ல் உலகின் மிகப்பெரிய வானூர்தி அன்டனோவ் ஏ.என் 225 மிரியா பறக்க விடப்பட்டது.
1991ல் கசக்ஸ்தானில் கூடிய பதினொரு சோவியத் குடியரசுகளின் தலைவர்கள் தனிநாடுகளின் பொதுநலவாய அமைப்பு உருவாகியவுடன் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி டிசம்பர் 26 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
1992ல் இடச்சு விமானம் பாரோ விமான நிலையத்தில் மோதியதில் 56 பேர் உயிரிழந்தனர்.
1995ல் பெத்லகேம் நகரம் இசுரேலியர்களிடம் இருந்து பாலத்தீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
2004ல் ஈராக் போர்: ஈராக்கின் மோசுல் நகரில் அமெரிக்கப் படைகள் மீதான தற்கொலைத் தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.
2007ல் பாக்கித்தானில் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 21-12 | December 21

1118ல் ஆங்கிலேய ஆயரும் புனிதருமான‌ தாமஸ் பெக்கெட் பிறந்த நாள். (இறப்பு-1170)
1550ல் முகலாயப் படைத்தலைவரான‌ மான் சிங் பிறந்த நாள். (இறப்பு-1614)
1804ல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரான‌ பெஞ்சமின் டிஸ்ரைலி பிறந்த நாள். (இறப்பு-1881)
1871ல் ஈழத்துத் தமிழறிஞரான நா. கதிரைவேற்பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1907)
1890ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவரான‌ ஹெர்மன் முல்லர் பிறந்த நாள். (இறப்பு-1967)
1892ல் ஆங்கிலேய ஊடகவியலாளரும் நூலாசிரியருமான‌ ரெபெக்கா வெஸ்ட் பிறந்த நாள். (இறப்பு-1983)
1898ல் அமெரிக்க இயற்பியலாளரும் வானியலாளருமான‌ இரா சுப்பிரேகு போவன் பிறந்த நாள். (இறப்பு-1973)
1920ல் இலங்கை வழக்கறிஞரும் நீதிபதியும் அரசியல்வாதியுமான‌ தெ. வ. இராசரத்தினம் பிறந்த நாள். (இறப்பு-1994
1921ல் தமிழக இடதுசாரி அரசியல்வாதியான‌ ஆர். உமாநாத் பிறந்த நாள். (இறப்பு-2014)
1932ல் இந்தியக் கவிஞரும் எழுத்தாளரும் திறனாய்வாளருமான‌ உ. இரா. அனந்தமூர்த்தி பிறந்த நாள். (இறப்பு-2014)
1937ல் தமிழக அரசியல்வாதியான‌ பண்ருட்டி இராமச்சந்திரன் பிறந்த நாள்.
1942ல் சீனாவின் 6வது அரசுத்தலைவரான‌ கூ சிங்தாவ் பிறந்த நாள்.
1947ல் இசுப்பானிய கித்தார் இசைக்கலைஞரான‌ பாக்கோ தே லூசீயா பிறந்த நாள். (இறப்பு-2014)
1948ல் தமிழக அரசியல்வாதியான‌ ஈ. வெ. கி. ச. இளங்கோவன் பிறந்த நாள்.
1948ல் அமெரிக்கநடிகரும் தயாரிப்பாளருமான‌ சாமுவேல் எல். ஜாக்சன் பிறந்த நாள்.
1949ல் புர்க்கினா பாசோவின் 5வது அரசுத்தலைவரான‌ தோமசு சங்காரா பிறந்த நாள். (இறப்பு-1987)
1954ல் அமெரிக்க டென்னிசு வீரரான‌ கிரிசு எவர்ட் பிறந்த நாள்.
1959ல் தமிழக துடுப்பாட்ட வீரரான‌ கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பிறந்த நாள்.
1963ல் இந்தித் திரைப்பட நடிகரும் பாடகரும் அரசியல்வாதியுமான‌ கோவிந்தா பிறந்த நாள்.
1967ல் ஜார்ஜியாவின் 3வது அரசுத்தலைவரான‌ மிக்கைல் சாக்கஷ்விலி பிறந்த நாள்.
1972ல் இந்திய அரசியல்வாதியான‌ ஜெகன் மோகன் ரெட்டி பிறந்த நாள்.
1977ல் பிரான்சின் அரசுத்தலைவரான‌ இம்மானுவேல் மாக்ரோன் பிறந்த நாள்.
1985ல் இந்தியப் பின்னணிப் பாடகியும் நடிகையுமான‌ ஆண்ட்ரியா ஜெரெமையா பிறந்த நாள்.
1989ல் இந்தியத் திரைப்பட நடிகையான‌ தமன்னா பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 21-12 | December 21

72ல் உரோமைப் புனிதரும் திருத்தூதருமான‌ தோமா இறப்பு நாள்.
1597ல் டச்சு மதகுருவும் புனிதருமான‌ பீட்டர் கனிசியு இறப்பு நாள். (பிறப்பு-1521)
1940ல் அமெரிக்க எழுத்தாளரான‌ எப். ஸ்காட் பிட்ஸ்ஜெரால்ட் இறப்பு நாள். (பிறப்பு-1896)
1942ல் செருமானிய-அமெரிக்க மானிடவியலாளரான‌ பிராண்ஸ் போவாஸ் இறப்பு நாள். (பிறப்பு-1858)
1975ல் தமிழக எழுத்தாளரும் காந்தியவாதியுமான‌ கோவை அய்யாமுத்து இறப்பு நாள். (பிறப்பு-1898)
1986ல் இலங்கை வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான‌ சோமசுந்தரம் நடேசன் இறப்பு நாள். (பிறப்பு-1904)
1988ல் நோபல் பரிசு பெற்ற டச்சு ஆங்கிலேய மருத்துவரான‌ நிக்கோ டின்பெர்ஜென் இறப்பு நாள். (பிறப்பு-1907)
1998ல் ஈழத்து பதிப்பாளரும் தொழிலதிபருமான‌ துரை விஸ்வநாதன் இறப்பு நாள். (பிறப்பு-1931)
2006ல் ஈழத்தின் மறுமலர்ச்சி எழுத்தாளரான‌ வரதர் இறப்பு நாள். (பிறப்பு-1924)
2008ல் ஈழத்து எழுத்தாளரும் நடிகருமான‌ கே. இந்திரகுமார் இறப்பு நாள்.
2010ல் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞரான‌ ஈழத்துப் பூராடனார் இறப்பு நாள். (பிறப்பு-1928)
2011ல் இந்திய அணு அறிவியலாளரான‌ பி. கே. அய்யங்கார் இறப்பு நாள். (பிறப்பு-1931)
2015ல் தமிழகத் தொழுநோய் மருத்துவரும் எழுத்தாளருமான‌ சார்வாகன் இறப்பு நாள். (பிறப்பு-1929)
2018ல் தமிழக எழுத்தாளரும் திறனாய்வாளருமான‌ பிரபஞ்சன் இறப்பு நாள். (பிறப்பு-1945)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleDecember 20 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 20
Next articleDecember 22 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 22