June 19 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 19

0

June 19 Today Special | June 19 What Happened Today In History. June 19 Today Whose Birthday (born) | June-19th Important Famous Deaths In History On This Day 19/06 | Today Events In History June-19th | Today Important Incident In History | ஜூன் 19 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 19-06 | ஆனி மாதம் 19ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 19.06 Varalatril Indru Nadanthathu Enna.

June 19
June 19

Today Special Historical Events In Tamil | 19-06

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 19-06

  • அங்கேரி நாட்டின் விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது.
  • டிரினிடாட் மற்றும் டொபாகோ தீவுகளில் தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள் கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 19-06 June 19

  • கிமு 325ல் நைசியாவில் (இன்றைய துருக்கியில்) முதலாவது பேரவையில் நைசின் விசுவாச அறிக்கை வெளியிடப்பட்டது.
  • 1269ல் ஒன்பதாம் லூயி மன்னர் பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் 10 வெள்ளி லிவ்ராக்கள் தண்டமாக‌ செலுத்த வேண்டும் என கட்டளை இட்டார்.
  • 1306ல் மெத்வென் சமரில் புரூசின் இசுக்காட்லாந்துப் படைகளை பெம்புரோக் பிரபுவின் படைகள் தோற்கடித்தன.
  • 1586ல் ஆங்கிலேயக் குடியேறிகள் இங்கிலாந்தின் நிரந்தரக் குடியிருப்பை வட அமெரிக்காவில் அமைப்பதில் தோல்வியடைந்ததை தொடர்ந்து ரோனோக் தீவில் இருந்து வெளியேறினர்.
  • 1850ல் சுவீடன்-நோர்வேயின் பிற்கால மன்னர் இலவரசர் கார்லை நெதர்லாந்து இளவரசி லூயீசு மணந்து கொண்டார்.
  • 1862ல் அமெரிக்க மாநிலங்களில் அடிமை முறையை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் தடை செய்தது.
  • 1867ல் மரணதண்டனை விதிக்கப்பட்டதால் மெக்சிகோ பேரரசர் முதலாம் மாக்சிமிலியன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
  • 1875ல் எர்செகோசுவீடன்-நோர்வேயின் பிற்கால மன்னர் இலவரசர் கார்லைவினால் உதுமானியப் பேரரசுக்கு எதிராக எழுச்சி ஆரம்பமானது.
  • 1903ல் பெனிட்டோ முசோலினி பொது வேலை நிறுத்தத்தைத் தூண்டியமைக்காக பேர்ன் நகரில் கைது செய்யப்பட்டார்.
  • 1910ல் முதல் தடவையாக அமெரிக்காவில் வாசிங்டன் நகரில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.
  • 1943ல் டெக்சாசில் இனமோதல் இடம்பெற்றது.
  • 1944ல் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பிலிப்பைன் கடல் சமர் நடைபெற்றது.
  • 1949ல் தேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி முதன் முறையாக‌ இடம்பெற்றது.
  • 1953ல் பனிப்போர் நடைபெற்றதுடன் யூலியசு, எத்தல் ரோசன்பர்க் என்ற யூதத் தம்பதிகள் சோவியத் ஒன்றியத்துக்கு அமெரிக்காவின் அணுவாயுத இரகசியங்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
  • 1961ல் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து குவைத் விடுதலையை அறிவித்தது.
  • 1964ல் அமெரிக்க மேலவையில் மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • 1985ல் மத்திய அமெரிக்கத் தொழிலாளர் புரட்சிக் கட்சி உறுப்பினர்கள் சல்வடோர் படையினராக வேடமிட்டு சான் சல்வடோரில் சோனா ரோசா பகுதியைத் தாக்கியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1987ல் எசுப்பானியாவில் கடைத்தொகுதி ஒன்றில் எட்டா விடுதலை அமைப்பு போராளிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1988ல் வியட்நாமின் 117 மாவீரர்களுக்கு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் புனிதர் பட்டமளித்தார்.
  • 1990ல் உருசிய-சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசின் கம்யூனிஸ்டுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
  • 1991ல் சோவியத் ஆக்கிரமிப்பு அங்கேரியில் முடிவுக்கு வந்தது.
  • 2007ல் அல்-கிலானி பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலினால் பக்தாதில் 78 பேர் கொல்லப்பட்டதுடன் 218 பேர் காயமடைந்தனர்.
  • 2009ல் தாலிபான்களுக்கு எதிரான இரா-கி-நிசாத் இராணுவ நடவடிக்கை வடமேற்குப் பாக்கித்தானில் ஆரம்பமானது.
  • 2012ல் விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசாஞ்சு இலண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் 2019 இல் கைது செய்யப்படும் வரை அரசியல் தஞ்சம் அடைந்தார்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 19-06 June 19

  • 1566ல் இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு பிறந்த நாள் (இறப்பு 1625)
  • 1595ல் 6வது சீக்கிய குருவான‌ குரு அர்கோவிந்த் பிறந்த நாள் (இறப்பு 1644)
  • 1623ல் பிரான்சியக் கணிதவியலாளரும் இயற்பியலாளருமான‌ பிலைசு பாஸ்கல் பிறந்த நாள் (இறப்பு 1662)
  • 1861ல் பிலிப்பீனிய ஊடகவியலாளரும் எழுத்தாளருமான‌ ஒசே ரிசால் பிறந்த நாள் (இறப்பு 1896)
  • 1911ல் இலங்கையின் 2வது பிரதமரான‌ டட்லி சேனாநாயக்க பிறந்த நாள் (இறப்பு 1973)
  • 1918ல் இலங்கை குற்றவியல் சட்டவறிஞரான‌ கே. சி. நடராஜா பிறந்த நாள்
  • 1925ல் தமிழக எழுத்தாளரான‌ ஜெகசிற்பியன் பிறந்த நாள் (இறப்பு 1978)
  • 1928ல் இந்திய திராவிட மொழியியல் ஆய்வாளரான‌ ப. கிருட்டிணமூர்த்தி பிறந்த நாள் (இறப்பு 2012)
  • 1935ல் தமிழக-சிங்கப்பூர் தமிழறிஞரான‌ சு. ப. திண்ணப்பன் பிறந்த நாள்
  • 1945ல் செர்பிய-பொசுனிய அரசியல்வாதியும் போர்க் குற்றவாளியுமான‌ ரதொவான் கராட்சிச் பிறந்த நாள்
  • 1945ல் நோபல் பரிசு பெற்ற பர்மிய அரசியல்வாதியான‌ ஆங் சான் சூச்சி பிறந்த நாள்
  • 1945ல் அமெரிக்க எழுத்தாளரான‌ டோபியாஸ் உல்ஃப் பிறந்த நாள்
  • 1946ல் தமிழக எழுத்தாளரான‌ மா. சந்திரமூர்த்தி பிறந்த நாள்
  • 1947ல் இந்திய-ஆங்கிலேய எழுத்தாளரான‌ சல்மான் ருஷ்டி பிறந்த நாள்
  • 1951ல் எகிப்திய மெய்யியலாளரும் தீவிரவாதியுமான‌ ஐமன் அழ்-ழவாகிரி பிறந்த நாள்
  • 1959ல் செருமானிய அரசியல்வாதியான‌ கிரிஸ்டியன் உல்ஃப் பிறந்த நாள்
  • 1960ல் தமிழீழ விடுதலைப் புலிப் போராளியான‌ லெப்டினன்ட் சங்கர் பிறந்த நாள் (இறப்பு 1982)
  • 1961ல் நேபாளத்தின் 2வது குடியரசுத் தலைவரான‌ வித்யா தேவி பண்டாரி பிறந்த நாள்
  • 1970ல் இந்திய அரசியல்வாதியான‌ ராகுல் காந்தி பிறந்த நாள்
  • 1980ல் தமிழக கருநாடக இசைக் கலைஞரான‌ நாகை ஸ்ரீராம் பிறந்த நாள்
  • 1985ல் இந்திய நடிகையான காஜல் அகர்வால் பிறந்த நாள்

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 19-06 June 19

  • 1720ல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய மீகாமனான‌ ரொபர்ட் நொக்ஸ் இறப்பு நாள் (பிறப்பு 1641)
  • 1747ல் ஈரானிய அரசரான‌ நாதிர் ஷா இறப்பு நாள் (பிறப்பு 1688)
  • 1867ல் மெக்சிகோ மன்னரான‌ முதலாம் மாக்சிமிலியன் இறப்பு நாள் (பிறப்பு 1832)
  • 1990ல் இலங்கைப் போராளியும் அரசியல்வாதியுமான‌ க. யோகசங்கரி இறப்பு நாள்
  • 1993ல் நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளரான‌ வில்லியம் கோல்டிங் இறப்பு நாள் (பிறப்பு 1911)
  • 2012ல் ஆங்கிலேயத் தமிழறிஞரும் கிரேக்க செவ்வியல் அறிஞருமான‌ ராபின் மெக்கிலாசன் இறப்பு நாள்
  • 2013ல் அமெரிக்க நடிகரும் தயாரிப்பாளருமான‌ ஜேம்ஸ் கண்டோல்பினி இறப்பு நாள் (பிறப்பு 1961)
  • 2016ல் தமிழகக் கவிஞரான‌ குமரகுருபரன் இறப்பு நாள் (பிறப்பு 1974)
  • 2020ல் தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரான‌ ஏ. எல். ராகவன் இறப்பு நாள் (பிறப்பு 1933)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleJune 18 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 18
Next articleஇன்றைய ராசி பலன் 08.03.2021 Today Rasi Palan 08-03-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!