24 மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால் இந்த நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் தெரியுமா!

0

சாப்பாட்டு பிரியர்கள், சோத்து முட்டை, தீனி பண்டாரம்..இப்படி பலவித பெயர்கள் எப்போதுமே சாப்பிட்டு கொண்டே இருக்கும், சாப்பாட்டின் மீது உயிரையே வைத்திருக்கும் பலருக்கும் வழங்கப்படும் புனை பெயர்கள். சிலருக்கு இப்படிப்பட்ட பெயர்களை கேட்டாலே சந்தோசம் மட்டும் தான்.

எந்நேரமும் சாப்பாட்டை பற்றி நினைக்கும் இவர்களை 1 நாள் முழுக்க சாப்பிடாமல் வைத்திருந்தால் என்னவாகும்..?! அவ்வளவு தான்! இவர்களுக்கே இப்படி என்றால் நம்மை போன்ற சாதாரமானவர்களுக்கு என்னவிதமான மாற்றங்கள் உடலில் ஏற்படும் என்பதை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் பல நல்ல மாற்றங்கள் உண்டாகும் என மருத்துவர்களே கூறுகின்றனர். 24 மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால் அதிக பட்சமாக எத்தகைய வேறுபாடுகள் உடலில் உண்டாகும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

விரதம்! நம்ம ஊரில் பல பெண்கள் இந்த வார்த்தைக்கு பேருபெற்றவர்கள். காரணம் செவ்வாய் கிழமை ஒரு விரதம், வெள்ளி கிழமை ஒரு விரதம், புதன் கிழமை ஒரு விரதம் இப்படி பல விதமான விரதங்களை மேற்கொள்வார்கள். விரதம் இருப்பது நல்லது தான், என்றாலும் இது போன்ற அனாவசிய விரதங்கள் தேவை இல்லாத ஒன்று.

முதல் 8 மணி நேரம்! 24 மணி நேரத்தில் உங்களின் உடலில் நடக்க கூடிய மாற்றங்களை நாம் பிரித்து பிரித்து பார்ப்போம். முதல் 8 மணி நேரம் நம் உடல் மிக எளிதாக இந்த விரத நிலையை தாங்கி கொள்ளும். இந்த 8 மணி நேரம் வரை, கடைசியாக நீங்கள் சாப்பிட்ட உணவை வயிறு செரிமானிக்கும். அதே போல இரத்தமும் சீராக தனது வேலைகளை செய்யும்.

அடுத்த 8 மணி நேரம்! இதுவரை நீங்கள் விரதமே இல்லாமல் இருந்திருந்தால் உங்களுக்கு அடுத்த 8 மணி நேரத்திற்கு பசி எடுக்க ஆரம்பித்து விடும். எதையாவது சாப்பிட்டே ஆக வேண்டும் என்கிற எண்ணம் தோன்றி விடும். இப்போது உங்களின் வயிறு தனக்கான உணவை கேட்க தொடங்கும்.

உடல் எடை பலருக்கும் இந்த சந்தேகம் இருக்க தான் செய்யும். அதாவது, இது போல 1 அல்லது 2 நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையுமா? குறையாதா? உண்மை என்னவெனில், இவ்வாறு இவ்வாறு செய்வதால் உடலில் கலோரிகள் குறையும். மேலும், இது உங்களின் உடலில் சில கிலோ வரை குறைக்கவும் வாய்ப்புள்ளது.

நச்சுக்களை வெளியேற்ற உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை இந்த 1 நாள் விரதத்திற்கு உண்டு. ஒரு முழு நாள் எதையுமே சாப்பிடாமல் இருந்தால் இது வரை சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடும். மேலும், உங்களின் உடல் சுத்தம் பெற்றதாக நீங்களே உணர்வீர்கள்.

இதயம் 24 மணி நேரம் வரை எதையுமே சாப்பிடாமல் இருந்தால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகாது. மேலும், சர்க்கரை நோய் போன்ற அபாயங்களும் குறைவு என ஆய்வுகள் சொல்கின்றன.

மூளை 1 முழு நாள் விரதம் இருந்தால் மூளையின் திறன் அதிகரிக்குமாம். மற்ற நாட்களை விட எதையுமே சாப்பிடாமல் இருக்கும் நாளில் தான் உடல் சுத்தம் பெற்று சுறுசுறுப்பாக இருக்கும். மேலும், ஆரோக்கியமுடன் இருக்க ஒரு மாதத்திற்கு 1 முறை அல்லது 2 வாரத்திற்கு ஒரு முறை, இது போல 24 மணி நேரமும் சாப்பிடாமல் இருங்கள்.

நீர் அவசியம்! 24 மணி நேரம் முழுவதும் நீங்கள் எந்தவித உணவுகளையும் சாப்பிட கூடாது தான். என்றாலும் அவ்வப்போது தண்ணீர் குடித்து வரலாம். இது உங்களின் உடல் சுத்தமாக சிறந்த முறையில் உதவும். 24 மணி நேரம் முடியும் போது சில பழங்கள், பால், தயிர் போன்றவற்றை கொண்டு இதனை முடித்து கொள்ளலாம்.

இந்த 24 மணி நேர சேலன்ச் எல்லோருக்கும் உரியது கிடையாது. சில குறிப்பிட்டவர்களின் உடலில் இந்த முறை பாதிப்புகளை உண்டாக்கி விடும். முக்கியமாக சர்க்கரை நோய்கள், கர்ப்பிணிகள், 18 வயதுக்கும் கீழுள்ள குழந்தைகள், நோய்வாய்ப் பட்டுள்ளோர் இந்த பயிற்சியை செய்ய கூடாது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநிர்வாணமான கனவுகள் உங்களுக்கு வந்தால், அதில் இருக்கும் ஆபத்துகள் என்ன தெரியுமா!
Next articleவலன்ரைன் தின வரலாறு? காதலர் தினம் பற்றிய கதை!