வெளிநாட்டில் தீட்டப்பட்ட சதித்திட்டம்! 49 பேரை காவுவாங்கிய தீவிரவாதி தொடர்பில் வெளியான பகீர் தகவல்!

0

நியூசிலாந்து நாட்டில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பகதர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய தீவிரவாதி துருக்கி உள்ளிட்ட நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

குறித்த நபர் துருக்கியில் 43 நாட்கள் தங்கியிருந்ததாகவும், ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தற்போது அம்பலமாகியுள்ளது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் நுழைந்து துப்பாக்கியால் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டு 49 பேர், பெரும்பாலும் தொழுகைக்கு சென்றவர்களை படுகொலை செய்த தீவிரவாதி,

துருக்கி நாட்டுக்கு இருமுறை பயணம் மேற்கொண்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மட்டுமின்றி மொத்தம் 43 நாட்கள் துருக்கியில் அவர் தங்கியுள்ளதும், குறித்த காலகட்டத்தில் அவரது நகர்வுகள் என்னவாக இருந்தன என்பது தொடர்பில் துருக்கி அதிகாரிகள் தற்போது விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

துருக்கி ஜனாதிபதி எர்டோகன் மீது வன்மம் கொண்டுள்ள அந்த நபர், கொலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.

துருக்கி ஜனாதிபதிக்கு எதிரான போராட்டமானது கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் திகதி நடைபெற்றது.

ஆனால் நியூசிலாந்து தாக்குதல்தாரி, அதே ஆண்டு மார்ச் மாதம் 17 முதல் 20 ஆம் திகதிவரை துருக்கியில் தங்கியுள்ளார்.

மேலும் செப்டம்பர் 16 ஆம் திகதி துருக்கியில் நுழைந்த அவர் பின்னர் அக்டோபர் 25 ஆம் திகதி வெளியேறியுள்ளார்.

இந்த 43 நாட்களில் அவரது நடவடிக்கை என்ன என்பதும், அவர் தொடர்பு கொண்ட நபர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணைக்கு துருக்கி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது,

முன்னதாக, கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 முதல் 15 ஆம் திகதி வரை பல்கேரியாவில் தங்கியதாக வெளியான தகவலை அடுத்து, அந்த நாட்டு அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநியூசிலாந்து சம்பவத்தின் முக்கிய தீவிரவாதியிடம் ரகசிய அறையில் விசாரணை! மௌனம் காத்த நிமிடங்கள்! வெளியான வீடியோ!
Next articleஇந்தியர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்திய நியூசிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்!