நியூசிலாந்து சம்பவத்தின் முக்கிய தீவிரவாதியிடம் ரகசிய அறையில் விசாரணை! மௌனம் காத்த நிமிடங்கள்! வெளியான வீடியோ!

0

நியூசிலாந்தில் Christchurch நகரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் முக்கிய குற்றவாளியான Brenton Tarrant நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

அவுஸ்திரேலியாவை பிறப்பிடமாக கொண்ட 28 வயதான Brenton Tarrant, துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை நிறை கைதிகள் ஆடை அணிந்து நியூசிலாந்து நீதிமன்றத்தில் காவலர்களால் அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தியதில் எவ்வித பதிலும் சொல்லாமல் மௌனமாக இருந்துள்ளான்.

கதவுகள் அடைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் இவரிடம் ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது அவர் ஜாமீன் எதுவும் கேட்கவில்லை. மேலும், ஏப்ரல் 5 ம் தேதி தனது அடுத்த நீதிமன்ற விசாரணை வரை காவலில் இருக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் கூறியதாவது, இது மிகவும் மூர்க்கத்தனமானது, உணர்ச்சி மிகுந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லீம் நாடுகளில் இருந்து வந்தவர்கள், துருக்கி, வங்கதேசம், இந்தோனேசியா மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள் என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபொள்ளாச்சி விவகாரம்! அடுத்தடுத்து போன் செய்த பாதிக்கப்பட்ட பெண்கள்! வெளிவந்த உண்மை!
Next articleவெளிநாட்டில் தீட்டப்பட்ட சதித்திட்டம்! 49 பேரை காவுவாங்கிய தீவிரவாதி தொடர்பில் வெளியான பகீர் தகவல்!