Home thatstamil one india tamil oneindia tamil விதவை பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்த நபர்! அவரை கொன்று சடலத்துடன் தூங்கிய பயங்கரம்!

விதவை பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்த நபர்! அவரை கொன்று சடலத்துடன் தூங்கிய பயங்கரம்!

0
569

தமிழகத்தில் காதலியை கொலை செய்துவிட்டு சடலத்துடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தை சேர்ந்த ரவி என்பவர் கல் மாவு மில் நடத்தி வருகிறார்.

ரவி, தனது மில்லில் கூலி வேலை பார்த்து வந்த பாப்பாத்தி என்ற விதவைப் பெண்ணை உயிராக காதலித்து வந்துள்ளார்.

தினமும் இரவு பாப்பாத்தியும், ரவியும் கல் மாவு மில்லில் உள்ள அலுவலக அறையில் தனிமையை கழித்து வந்துள்ளனர். இதை அறிந்த மற்ற கூலி தொழிலாளர்கள் பாப்பாத்தியை கண்டித்து உள்ளனர் .
ரவி, தனது வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதோடு, தனது 4 குழந்தைகளின் கல்விச் செலவுக்கும் உதவியதால் அவருடனான தொடர்பை பாப்பாத்தி துண்டிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கல்மாவு மில் மூடிக் கிடந்ததால், வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். நேற்று மில்லின் உள்ளிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மாவு மில்லை திறந்த போது பாப்பாத்தி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

அவரது அருகில் ரவி குடிபோதையில் படுத்துக் கிடந்தார்.

பாப்பாத்தியின் சடலத்தைக் கைப்பற்றிய பொலிசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அவரது உடலை பரிசோதித்தனர்.

இதில் அவரின் தலை சுவற்றில் மோதியதால் மண்டை உடைந்து உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

போதை தெளிந்த பின்னர் ரவி அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று பாப்பாத்தியும், ரவியும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது பாப்பாத்தியின் நடத்தை சம்பந்தமாக எழுந்த சந்தேகத்தில் ஏற்பட்ட தகராறில், அவரைப் பிடித்து ரவி சுவற்றில் தள்ளி கொலை செய்துள்ளார்.

ஆனால் பாப்பாத்தி குடிபோதையில் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்து ரவி அப்படியே விட்டுவிட்டார்.

சம்பவத்தன்று காலையில், பாப்பாத்தி மீது குடம் குடமாக தண்ணீரைக் கொட்டி போதையைத் தெளிய வைக்க முயன்றுள்ளார். பாப்பாத்தி அசைவின்றி கிடந்ததால், அவர் இறந்தது ரவிக்கு தெரியவந்தது.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த ரவி அந்த அறையிலேயே படுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதன்பின்னர் தான் துர்நாற்றம் வீசியதால் அவர் சிக்கி கொண்டார்.

ரவியை கைது செய்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் பாப்பாத்தியின் 4 குழந்தைகளும் அனாதையாகியுள்ளன.

Previous articleபணம் இல்லாததால் விவாகரத்து செய்த மனைவி, அதன்பிறகு வாழ்க்கையில் நடந்த பெரிய கொடுமை- கண்ணீர் விடும் சீரியல் நடிகர்!
Next articleமீண்டுமொரு கறுப்பு ஜூலை! இரண்டாக உடையும் கூட்டமைப்பு!