மீண்டுமொரு கறுப்பு ஜூலை! இரண்டாக உடையும் கூட்டமைப்பு!

0

கலப்பு நீதிமன்ற பொறிமுறையை கூட்டமைப்பு கேட்டால் மீண்டுமொரு கறுப்பு யூலை உருவாகும் என டிலான் பெரேரா வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ, இவ்வாறான கருத்துக்கள் இலங்கை இரண்டாக உடைவதற்கே வழி வகுக்கும் என எச்சரித்துள்ளது.

கறுப்பு யூலையை விட மோசமான நிலை வந்தாலும் தமிழ் மக்கள் அதனை எதிா்கொள்ளத் தயாராக உள்ளனர் எனக் குறிப்பிட்ட ரெலோவின் செயலாளர் என் ஸ்ரீகாந்தா, அதன் முடிவு முள்ளிவாய்க்கால் போன்று முடிவடையாது என குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக்கட்டப் போரின் போது நிகழ்த்தப்பட்ட போர் குற்றங்கள் உள்ளிட்ட மனிதபிமானத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்கென ஐ.நா தீர்மானத்தில் முன்மொழியப்பட்டுள்ள வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு பொறிமுறை, தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டால் ஜுலை கலவரம் மீண்டும் உருவாகும் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா கூறியிருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இம்முறையில் ஸ்ரீலங்காவின் இணை அனுரணையுடன் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகூறலுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், டிலான் பெரேராவின் இந்த கருத்து மூலம் தமிழ் மக்களை அடிபணிய வைக்க முடியாது என யாழ் ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ரெலோவின் செயலாளரும் மூத்த சட்டதரணியுமான என்.ஸ்ரீகாந்தா அடித்துக்கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவிதவை பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்த நபர்! அவரை கொன்று சடலத்துடன் தூங்கிய பயங்கரம்!
Next articleதிருமணத்திற்கு முன் குழந்தை! நேரலை வீடியோவில் உயிரை விட்ட பெண்!