வறுத்த 6 பூண்டுகள் தரும் ஆரோக்கிய நன்மைகள்!

0

சமையலில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.

அதிலும் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் இன்னும் நிறைய நன்மைகள் உண்டு. உடல் எடை குறைவது மட்டுமில்லாமல் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இத்தகைய பூண்டுகளை வறுத்து சாப்பிடுவதாலும் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

வறுத்த பூண்டுகளை சாப்பிடுவதால் உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.
மேலும், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.
பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.

குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக(antibiotic) செயல்படுவதாக தெரிய வந்துள்ளது.
மேலும், இரத்த ஓட்டத்தை சீராக்கி இரத்த அழுத்தத்தை குறைக்கும் எனவும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
உடலில் உள்ள செல்களின் பலப்படுத்துவதோடு, எலும்புகளின் வலிமையை அதிகரிக்க செய்யும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅந்த இடத்தில் கை வைத்து அழுத்துங்க! தாங்கமுடியாத தலைவலியால் அவதிப்படுபவர்கள்!
Next articleஉங்களுக்கு ஏன் வாய் துர்நாற்றம் அடிக்கிறது? கண்டுபிடிப்பது எப்படி?