உங்களுக்கு ஏன் வாய் துர்நாற்றம் அடிக்கிறது? கண்டுபிடிப்பது எப்படி?

0

பல், ஈறுகளில் ஏற்படும் கோளாறுகளே வாய் நாற்றத்துக்கு முதன்மைக் காரணங்கள். மூக்கு, தொண்டை, மூச்சுக் குழல், நுரையீரல், உணவுக் குழல், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் உண்டாகும் நோய்கள் அடுத்த காரணங்கள் ஆகும்.

சரியாகப் பல் துலக்காமல் இருப்பது, உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாய் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

நாம் மற்றவர்களுடன் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது எதிரில் உள்ளவர்கள் முகத்தைச் சுளிக்கிறார்கள் என்றால், அதற்கு நாம் பேசும் விஷயம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருப்பதைக் காட்டிலும், நம் வாயிலிருந்து வரும் நாற்றம்கூடக் காரணமாக இருக்கலாம்.

இதிலும், மார்க்கெட்டிங் போன்ற வேலைகளில் இருப்பவர்கள் கண்டிப்பாக தங்களது வாயை துர்நாற்றமடிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.

உங்களுக்கு ஏன் வாய் துர்நாற்றம் அடிக்கிறது என்பதை எப்படி அறிவது?
கலர் டெஸ்ட்
பின்க் நிறம் – பின்க் நிறத்தில் இருந்தால் உங்களுக்கு வாய் துர்நாற்றம் அடிக்க வாய்ப்புகள் இல்லை.

மஞ்சள் / வெள்ளை – பாக்டீரியா தாக்கம் இருந்தால் தான் நாக்கில் மஞ்சள் / வெள்ளை படிமம் படரும். இதனால் தான் வாய் துர்நாற்றம் அதிகரிக்கும்.

ஸ்பூன் டெஸ்ட்
ஸ்பூன் டெஸ்ட் என்பது தான் சரியாக கண்டறிய உதவும். ஸ்பூன் அல்லது டங் கிளீனர் பயன்படுத்தி நாக்கை சுத்தம் செய்து, அதில் வரும் வாசத்தை வைத்தே உங்களுக்கு எவ்வளவு வாய் துர்நாற்றம் இருக்கிறது என்பதை அறிய முடியும்.

வாய் துர்நாற்றத்தை போக்க பத்து வழிகள்:
புதினாச் சாறு அல்லது எழுமிச்சை சாறு போன்றவற்றை கொப்பளிப்பது, அல்லது, புதினா, எலுமிச்சை, ஆரஞ்சு தோல் போன்றவற்றை மெல்லுவதால் வாய் துர்நாற்றம் போக்கலாம்.

தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால் வாய் துர்நாற்றம் சரியாகும்.

அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை( Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.

குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவறுத்த 6 பூண்டுகள் தரும் ஆரோக்கிய நன்மைகள்!
Next articleஉங்கள் விரல் நகத்தில் பிறை போன்று உள்ளதா? அப்ப இந்த கோளாறு தான்!