யாழ். இளைஞர் தர்ஷனை எச்சரிக்கும் பார்வையாளர்கள்! கவலையில் இலங்கையர்கள் !

0

பிக் பாஸ் ப்ரொமோ பார்த்தவர்கள் வேண்டாம் தர்ஷன் வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் தர்ஷனை பார்வையாளர்கள் அனைவருக்குமே பிடித்துள்ளது. அவரை இளம் பெண்களுக்கு அதிகம் பிடித்துள்ளதால் சிங்கிள்ஸுகளுக்கு கடுப்பாக இருந்தாலும் பையன் நியாயமாக நடந்து கொள்கிறார் என்கிறார்கள்.

இந்நிலையில் தான் தர்ஷனை வைத்து ஒரு ப்ரொமோ வெளியிட்டுள்ளனர். நான் ரொம்ப மிஸ் பண்ணுவது என் ஷெரின் டார்லிங்கை என்று தர்ஷன் கூறுகின்றார்.

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த முதல் நாள் தேவதையாக வந்தாள் ஷெரின் என்று கூறிய தர்ஷன் அவரை கட்டிப்பிடிக்கிறார்.

அந்த அழகை பார்த்த உடனேயே நினைச்சேன் நான் சாகும் வரை சன்னியாசியாகத்தான் இருப்பேன் என்கிறார்.

தர்ஷன் போய் ஷெரினை தேவதை என்று கூறி கட்டிப்பிடிப்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. தர்ஷன் உஷாராக இருந்து கொள்ளுங்கள்.

டிஆர்பிக்காக ஆன்ட்டி லவ்வில் உங்களை கோர்த்துவிடப் பார்க்கிறார்கள். சிக்கிடாதீங்க, உங்களுக்கு நல்ல பெண் கிடைப்பார். நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்கிறார்கள் ரசிகைகள்.

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் கவினுடன் சாக்ஷி, அபிராமி, லாஸ்லியாவை கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். இந்த கவின் மூஞ்சியை பார்த்தாலே கடுப்பாக இருக்கிறது என்று விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் தர்ஷனை வைத்து கேம் ஆடப் போகின்றார்கள் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றது.

தர்ஷன் இப்படி எல்லாம் பேசுபவர் இல்லை. இது ஏதாவது டாஸ்காக இருக்கும். ஆனால் ஷெரினுக்கு தர்ஷன் மீது ஃபீலிங் இருக்கிறது என்கிறார்கள் நெட்டிசன்கள்.

என்ன தான் டாஸ்க் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா?. இப்படித் தான் சின்னப் புள்ளைய போய் ஆன்டி கிட்ட பேசவிடுவதா என்று நக்கல் செய்கிறார்கள் நெட்டிசன்கள்.

இதேவேளை, இந்த ப்ரமோவை பார்த்து இலங்கை ரசிகர்கள் கடும் கவலையில் உள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 12.07.2019 Today rasi palan
Next articleமைக்கல் ஜாக்சன் போல மாறுவதற்காக $30,000 டாலர் செலவு செய்த இளைஞர்! இப்படி ஒரு ரசிகரா? கடும் சோகத்தில் தாய் !