மைக்கல் ஜாக்சன் போல மாறுவதற்காக $30,000 டாலர் செலவு செய்த இளைஞர்! இப்படி ஒரு ரசிகரா? கடும் சோகத்தில் தாய் !

0

மைக்கல் ஜாக்சனின் தீவிர ரசிகர் ஒருவர் அவரைப் போலவே முக அழைப்பு வேண்டும் என்று விரும்பி பல முறை முகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார்.

அர்ஜென்டினாவை சேர்ந்தவர் லியோ ப்லங்கோ என்ற 22 வயது இளைஞரே இவ்வாறு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இவர் இதுவரை $30,000/- செலவு செய்து பல்வேறு விதமான பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது முகத்தை மைக்கல் ஜாக்சன் போல் மாற்றி அமைத்திருக்கிறார்.

தனது 15 வயது முதல் இன்னும் பல்வேறு ஒப்பனை வழி முறைகளையும் பின்பற்றி வருகிறார்.
மைக்கல் ஜாக்சன் போல் முக அமைப்பு பெறுவதே தன்னுடைய விருப்பம் என்று லியோ கூறியுள்ளார்.

அவரது இந்த செயல் புகழ்பெற்ற பாப் மன்னருக்கு அஞ்சலி செலுத்தும் செயல் என்றும், அதனால் தான் அவர் தனது ஹீரோவைப் போலவே தோற்றமளிக்க விரும்புகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இவருடைய இந்த செய்கையால் இவரின் தாயார் மிகவும் வருந்துகிறார்.

பல நேரங்களில் தன்னுடைய மகன் லியோவா இது என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு அவருடைய முக மாற்றம் இருப்பதாக அவர் கூறுகிறார். லியோவிற்கு தனது சிறு வயது முதல் மைக்கல் ஜாக்சன் மீதான ஒரு பிடிப்பு இருந்து வந்தது.

தனது ஹீரோவைப் போல் தானும் இருக்க வேண்டும் என்று அவர் அப்போதே முடிவு செய்திருந்தார் அது முதல் 11 பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் இதர வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறார் லியோ.

ஆனால் அவருடைய இந்த மாற்றத்தில் இதுவரை அவருக்கு முழுமையான திருப்தியும் சந்தோஷமும் கிடைக்கவில்லை.

முற்றிலும் மைக்கல் ஜாக்சன் போல் தான் தோற்றமளிக்கவில்லை என்ற உணர்வு அவருக்கு இருப்பதாகவும் இன்னும் சில சர்ஜரிகள் செய்து அதனை முழுமை படுத்த வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும் தெரிவிக்கிறார் .

வலைத்தளங்களில் லியோவைப் பின்தொடரும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உண்டு.

மேலும் தெருக்களில் நடனம் புரிவதைப் பலரும் பார்த்து பாராட்டுவதாகவும் லியோ தெரிவிக்கிறார். இருப்பினும் பிளாஸ்டிக் சர்ஜரி மீது லியோவிற்கு இருக்கும் மோகம் குறித்து அவன் தாய் அவனைக் கண்டித்திருக்கிறார்.

முகத்தின் வடிவத்தை திருத்திக் கொள்வது என்பது முடி திருத்தம் செய்து கொள்வது போன்று எளிதானதல்ல, இதில் பல்வேறு ஆபத்துகள் நிறைந்துள்ளது என்றும் அவன் தாய் கூறி இருக்கிறார்.

பார்க்க பெருமளவில் மைக்கல் ஜாக்சன் போல் தோற்றமளிக்கும் லியோ, இன்னும் நிறைய மாறுதல்களை மேற்கொள்வதால் மட்டுமே முழுமையாக மைக்கல் ஜாக்சன் போல் மாற வேண்டும் என்ற கனவு நினைவாகும் என்றும் கூறுகிறார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாழ். இளைஞர் தர்ஷனை எச்சரிக்கும் பார்வையாளர்கள்! கவலையில் இலங்கையர்கள் !
Next articleசர்க்கரை நோயாளிகள் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா? ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம்?