Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 12.07.2019 Today rasi palan

இன்றைய ராசிப்பலன் – 12.07.2019 Today rasi palan

0
678

இன்றைய பஞ்சாங்கம்
12-07-2019, ஆனி 27, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 12.31 வரை பின்பு வளர்பிறை துவாதசி. விசாகம் நட்சத்திரம் பிற்பகல் 03.57 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம் – மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு காலை 09.54 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை.

ரிஷபம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மிதுனம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத வகையில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் உண்டாகாது. சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.

கடகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

சிம்மம்
இன்று நீங்கள் சிறு மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிட்டும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது.

கன்னி
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் மன அமைதி ஏற்படும். பணி புரிவோர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

துலாம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். வியாபாரத்தில் வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். எதிலும் நிதானம் தேவை.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை இருக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

தனுசு
இன்று உங்களுக்கு உற்றார் உறவினர்களால் நெருக்கடிகள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மகரம்
இன்று வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்து நல்ல லாபத்தை அடைவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். உத்தியோக ரீதியான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு கிட்டும். திடீர் பணவரவுகள் உண்டாகும். வங்கி சேமிப்பு உயரும்.

மீனம்
இன்று உங்கள் ராசிக்கு காலை 09.54 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் காரியங்களில் மதியத்திற்கு பிறகு சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் படிப்படியாக குறையும். தெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.

Previous articleமுட்டை சாப்பிட்ட பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க! ஏன் தெரியுமா!
Next articleயாழ். இளைஞர் தர்ஷனை எச்சரிக்கும் பார்வையாளர்கள்! கவலையில் இலங்கையர்கள் !