Home Jaffna News யாழ்ப்பாணத்தில் ஆவா குழு போய்! தனுரொக் குழு!

யாழ்ப்பாணத்தில் ஆவா குழு போய்! தனுரொக் குழு!

0
437

யாழ்ப்பாணத்தில் ஆவா குழு போய்! தனுரொக் குழு!
யாழ்ப்பாணத்தில் இயங்கும் சட்டவிரோத ஆவா குழுவின் உறுப்பினர்கள் சிலர், மற்றுமொரு சட்டவிரோத குழுவான தனுரொக் குழுவின் தலைவரது உறவினர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் குறித்த வீட்டிலிருந்த 15 வயது சிறுமி சிறு காயங்களுக்கு உள்ளானதாக வட மாகாணத்துக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முகத்தை மூடிய நிலையில், மூன்று உந்துருளிகளில் சென்ற 7பேர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதனால், வீட்டிலிருந்த சில பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Previous articleஜெயலலிதா வழக்கில் சிக்கியது சசிகலாவின் புதிய வீடியோ!
Next articleகண் சம்பந்தமான பிரச்சனைக்கு எளிய தீர்வு சொல்கிறார் நம்ம ரேவதி பாட்டி!