Home Patti Vaithiyam கண் சம்பந்தமான பிரச்சனைக்கு எளிய தீர்வு சொல்கிறார் நம்ம ரேவதி பாட்டி!

கண் சம்பந்தமான பிரச்சனைக்கு எளிய தீர்வு சொல்கிறார் நம்ம ரேவதி பாட்டி!

0
1481

வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.

கருவேலம் கொழுந்து இலையுடன் சீரகத்தை சேர்த்து அரைத்து வலியுள்ள கண்ணை மூடச் செய்து அதன்மேல் வைத்து பின்பு ஒரு வெற்றிலையை அதன்மேல் வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும். இரவில் கட்டி காலையில் அவிழ்த்து விடவேண்டும். இவ்வாறு மூன்று நரட்கள் செய்து வந்தால் கண்வலி குறையும்.

அருகம்புல் சமூலம், மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு 15 நாட்கள் வெயிலில் வைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்நோய்கள் குறையும்.

10 மி.லி பன்னீரில்10 கிராம் மரமஞ்சள், 3 கிராம் மஞ்சள் மற்றும் 3 கிராம் படிகாரம் ஆகியவற்றை கலந்து ஒரு கண்ணாடி பாத்திரத்தில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அதை எடுத்து ஒரு துணியில் வடிகட்டி அந்த நீரை கொண்டு 7 நாட்கள் முகம், கண்கள் ஆகியவற்றை நன்றாக கழுவி வந்தால் கண்ணில் ஏற்படும் கட்டிகள் குறைந்து கண் சிவப்பு, கண் வலி ஆகியவை குறையும்.

புளியம்பூவை அரைத்து கண்ணை சுற்றி பற்று போட்டால் கண்வலி, கண்ணில் ஏற்படும் சிவப்பு குறையும்.

Previous articleயாழ்ப்பாணத்தில் ஆவா குழு போய்! தனுரொக் குழு!
Next articleகோவிலில் அம்மனுக்கு குடைபிடித்த நாகபாம்பு! பக்தர்கள் பரவசத்தின்