Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal மெக்ஸிகோவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான 152 பாதிரியார்கள் நீக்கம்!

மெக்ஸிகோவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான 152 பாதிரியார்கள் நீக்கம்!

0
450

மெக்ஸிகோவில் கடந்த 9 வருடங்களில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான 152 பாதிரியார்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெக்ஸிகோவில் தேவலாயம் ஒன்றின் பேராயர் ஒருவர் கூறும்போது, ”கடந்த ஒன்பது வருடங்களில் மட்டும் 152 கத்தோலிக்க பாதிரியார்கள் சிறார்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக தேவாலயத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிறை தண்டனை பெற்றுள்ளனர்” என்றார் .

பிரேசிலுக்கு அடுத்து அதிகம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகமாக இருப்பது மெக்ஸிகோவில்தான்.

முன்னதாக, சில பாதிரியார்களும் பிஷப்புகளும் பாலியல் பலாத்காரச் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

2018-ல், கேரள கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் தன்னை[ பாலியல் பலாத்காரம் செய்ததாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியதை அடுத்து, இந்தப் பிரச்சினை பெரிதானது.

இதனைத் தொடர்ந்து தேவாலயங்களில் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடும் பாதிரியார்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உலக அளவில் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவிரைவில் நுரையீரல் பாதையில் அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற வழிகள்!
Next articleமாற்றுத்திறனாளி தற்கொலைக்கு உரிமை கோரும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி போலீஸார்!