விரைவில் நுரையீரல் பாதையில் அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற வழிகள்!

0

விரைவில் நுரையீரல் பாதையில் அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற வழிகள்.

குளிர் காலத்தின் போது நமக்கு அதிக தொல்லை தருவது இந்த சளி தான். இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் திடீரென தொந்தரவு தர ஆரம்பித்துவிடும். இதனால் நாம் ஒரு நாளை சிறப்பாக ஆரம்பிக்க முடியாமல் கூட போகலாம்.

சளித்தொல்லையில் இருந்து தப்பிக்க நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!

இது போன்று திடீரென ஏற்படும் சளி தொல்லைக்கு நீங்கள் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களை கொண்டே நல்ல தீர்வு காண முடியும்…

தேவையான பொருட்கள்!

தேன் – ஒரு டீஸ்பூன்
தேங்காய் என்னை – ஒரு டேபிள்ஸ்பூன்
ஆப்பிள் சிடர் வினீகர் – ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி – தேவையான அளவு

செய்முறை | ஸ்டெப் #1
சிறிதளவு புதிய இளம் இஞ்சியை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். மேல் தோலை சீவிய பிறகு துண்டு துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும்.

செய்முறை | ஸ்டெப் #2
நறுக்கிய இஞ்சியுடன் ஒரு கப் நீர் சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள். நல்ல கொதிநிலை அடைந்த பிறகு 15 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும். ஆறிய பிறகு, அதை ஒரு கிளாஸ் டம்ளர் அல்லது பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள்.

செய்முறை | ஸ்டெப் #3
எப்போதெல்லாம் சளி தொல்லை அதிகமாக உணர்கிறீர்களோ அப்போது அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினீகர் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடிக்கவும்!

செய்முறை | ஸ்டெப் #4
இது உடலில் அளவுக்கு அதிகமாக சேர்ந்துள்ள சளியை இரண்டு மணி நேரத்திலேயே வெளியேற்ற செயல்பட துவங்கிவிடும். நல்ல பலனளிக்கும்.

நுரையீரல் சளி என்பது சாதாரண விடயம் கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆரம்பத்தில் சாதாரண விடயமாக இருக்கும் இந்த சளி நாட்கள் சென்றபின் வேறு நோய்களையும் உருவாக்கிவிடும். அதனால் சளி ஆரம்பத்தில் இருக்கும் போதே வெளியேற்றுவது தான் சிறப்பு. இந்த மருந்து ஆஸ்துமா, நுரையீரல் சளி, இருமல், போன்றவற்றிக்கு நிவாரணம் அளிக்கிறது. சரி வாங்க முதலில் மருத்துவ குறிப்பை பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்:

வெற்றிலை ஒன்று. இஞ்சி சிறிய துண்டு. தேன் தேவையான அளவு. இவற்றை வைத்து எப்படி மருந்து செய்வதென பார்க்கலாம். முதலில் வெற்றிலையின் காம்பை நீக்கிவிடுங்கள். வெற்றிலையை துண்டு துண்டாக நறுக்கி அதனுடன் இஞ்சியை சேருங்கள். நன்றாக கொதித்த தண்ணீர் ஒரு டீஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து அதில் வரும் ஜூஸை சிறிய பாத்திரத்தில் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஜூஸ் சிறிது காரமாக இருக்கும் அதனால் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது மருந்து தயார். இந்த ஜூஸை காலை மற்றும் மாலை இரண்டு வேலையும் குடித்து வர இரண்டே நாட்களில் நுரையீரல் சளி ஆஸ்துமா போன்றவை நீங்கிவிடும்.

இது மலத்துடன் வெளியேறுவதால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. இந்த ஜூஸ் 10 வயதிற்கு மேட்பட்டவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநாட்டு மருத்துவர்கள் முத்தக்காசு என்று அழைக்கும் கோரைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்!
Next articleமெக்ஸிகோவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான 152 பாதிரியார்கள் நீக்கம்!