மலேசிய விமான நிலையத்தில் இலங்கை தமிழருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

0

பிரான்ஸின் ஊடாக சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் மலேசிய விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசிய கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயற்சித்த இலங்கையர் சுவர்ணபூமி, விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இலங்கையர் அந்நாட்டு குடிவரவு குடியல்வு அதிகாரிகளினால் இன்று காலை 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பரிஸ் சென்றடையும் முயற்சியில் குறித்த நபர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பிரபு தர்மலிங்கம் என்ற 45 வயதான இலங்கையர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய குடிவரவு அதிகாரி Pol Colonel Ploen Klinphayom தெரிவித்துள்ளார்.

தர்மலிங்கம், மலேசிய நபரின் கடவுச்சீட்டு புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், குடியேற்ற அதிகாரிகள் முக அடையாள நுட்பத்தைப் பயன்படுத்தும்போது, பல முரண்பாடுகளை கண்டுபிடித்துள்ளனர். அத்துடன் தர்மலிங்கம் ஒரு மோசடியாளர் என அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மலேசியா – சிங்கப்பூர் வழியாக அவர் மலேசியாவிற்கு பயணம் செய்து, அங்குள்ள முகவரிடம் கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டதாக தர்மலிங்கம் அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.

500,000 ரூபாய் பணம் இதற்காக தான் முகவருக்கு வழங்கியதாக இலங்கையர் தெரிவித்துள்ளார்.

சுவிட்ஸர்லாந்து செல்வதற்காக பிரான்ஸில் விமான டிக்கட் பெற தான் திட்டமிட்டதாக தர்மலிங்கம் கூறியுள்ளார்.

புகலிடம் கோரி சுவிட்ஸர்லாந்தில் உறவினர்களுடன் தங்க தர்மலிங்கம் முயற்சித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது? கரு கலைவதற்கு காரணங்கள் !
Next articleபீதியில் மக்கள்! இரவு வேளையில் திடீரென வீட்டுக்குள் புகுந்த பாரிய முதலை!