மனிதர்களிற்கு ஏற்படும் ஆபத்தான நோய் குறித்து முக்கிய அறிவிப்பு

0

தற்போதைய சூழலில் நாம் சுற்றுச்சூழல் மாசுக்களால் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறோம். சுத்தமான குடிநீர், சுத்தமான காற்று, ஆரோக்கியமான சத்தான உணவு என இம்மூன்றிலும் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாக என்சிபாலீடிஸ் எனப்படும் மூளை வீக்க நோய் உருவாகிறது.

இன்றைய திகதியில் இத்தகைய நோயால் உலகம் முழுவதும் 5 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து அறிவித்திருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்த நோய் ஜப்பானீஸ் என்சிபாலீடீஸ் என்றே வைத்தியத் துறையினரால் அழைக்கப்படுகிறது. இது பன்றி மற்றும் பறவைகளின் உடலிலுள்ள வைரஸ் கிருமிகளால் மனிதரிடம் தோன்றுகிறது. இது நுளம்புகளாலும் மனிதர்களிடத்தில் பரவுகிறது.

இதனால் மூளையில் அழற்சி ஏற்பட்டு வீக்கமடைந்து, நினைவு திறன் இழப்பு, தடுமாற்றம், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறன.

இதற்கான சிகிச்சை முறைகள் முழுமையாக இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் இந்த நோயை ஏற்படுத்தும் நோய் குறிகளுக்கான சிகிச்சையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிகிச்சையும் வழங்கப்பட்டு இதற்கான நிவாரணம் அளிக்கப்பட்டு வருகிறது.

சில பகுதிகளில் இருப்பவர்கள் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப இத்தகைய நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் மக்கள் எப்பொழுதும் தங்களை சுற்றியுள்ள சுற்றுப்புறங்களில் தூய்மையான காற்றுக்கும், சுத்தமான நீருக்கும் ,ஆரோக்கியமான சத்தான உணவுகளும் கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும்.

அதனூடாக தான் இத்தகைய பாதிப்பை தடுக்க இயலும். அதனால் இதுகுறித்த விழிப்புணர்வை மக்கள் முழுமையாக பெற வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகாதலனை மாற்றிய ஜூலி! அவரே கூறியுள்ள விளக்கம்!
Next articleஇன்று மிதுன ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்!