பொலிஸாரி்ன் நெகிழ்ச்சியான காரியம்! முதியவரிடம் யாரும் நெருங்க முடியாதளவு நாற்றம்!

0

தம்புள்ளையில் ஆதரவற்ற முதியவர் ஒருவருடன் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட பொலிஸார் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவரை குளிப்பாட்டி, சாப்பாடு கொடுத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தம்புள்ளை பொலிஸ் நிலையத்தின் அவசர அழைப்புப் பிரிவை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள்களான எம். எம். சி.கே ஹேரத், எம்.ஏ.சி ஏக்கநாயக்க ஆகிய இருவருமே மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டுள்ளனர்.

தம்புள்ளையில் வீதியில் வயதான முதியவரொருவர் விழுந்து கிடப்பதாக 119 அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக தகவல்களைப் பற்றி விசாரிக்க மோட்டார் சைக்கிளில் குறித்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்மாரும் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு வயதான முதியவர் ஒருவர் வீதியின் அருகே பல நாட்களாக குளிக்காமல் மிகவும் அசுத்தமாக இருப்பதை அவதானித்துள்ளனர்.

மலசலம் அந்த இடம் முழுவதும் நிறைந்து கிடந்துள்ளதுடன், அவர் அந்த இடத்திலே படுத்து உறங்கியுள்ளார். இதனால் பிரதேசவாசிகள் எவரும் அவர் பக்கத்தில் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பிரதேசவாசிகளே பொலிஸ் அவசர தொலைபேசிக்கு குறித்த முதியவர் தொடர்பாக தகவல் வழங்கியுள்ளனர்.

முதியவருக்கு அருகில் நெருங்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசியதாக பொலிஸ் கான்ஸ்டபிள் தெரிவித்துள்ளார்.

குறித்த இரு கான்ஸ்டபிளும் தங்கள் கடமையை ஆரம்பித்துள்ளனர். முதியவர் கிடந்த இடத்திற்கு அருகிலுள்ள வீட்டில் வசிப்பவர்களிடம் பேசி அவரை குளிப்பாட்டுவதற்குரிய இடத்தினை ஆயத்தம் செய்துள்ளனர்.

அந்த முதியவரை அழைத்துக்கொண்டு குளிப்பாட்டி அங்கிருந்தவர்களிடம் ஆடை வாங்கி அணிவித்து, சாப்பாடு வழங்கி தம்புள்ள ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பேராதெனிய கிரிபத்கும்புர பிரதேசத்சைத் சேர்ந்த பி.ஏ.கே தரம்பால என்ற இந்த முதியவரே இவ்வாறு துர்நாற்றத்துடன் வீதியில் கிடந்துள்ளார்.

அநேகம் சகோதர சகோதரிகள் உள்ளநிலையில் அவரை ஒருவரும் ஏற்றுக்கொள்ளாமல் வீதியில் கைவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருமணமாகாத இந்த முதியவர் தனக்கு சக்தி இருந்த காலத்தில் தன்னுடைய சகோதர, சகோதரிகளை கவனித்து வந்ததாக பொலிஸாரிடம் கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் சென்ற வாகனம் திடீர் விபத்து! 13 பேர் படுகாயம்!
Next articleசுற்றுலா பயணிகளுக்கு சீகிரியா குன்றில் காணக் கிடைத்த அரிய காட்சி!