இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் சென்ற வாகனம் திடீர் விபத்து! 13 பேர் படுகாயம்!

0

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட 13 பேர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகி உள்ளது.

குறித்த விபத்து நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் சிலர் குமரி மாவட்ட கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றனர்.

குமரி கியூ பிரிவு பொலிஸார் இலங்கைத் தமிழர்கள், இலங்கை அகதிகள் உள்ளிட்ட 13 பேரை கைது செய்து, திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளார்கள்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை இரணியல் நீதிமன்றில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்காக 13 பேரும் திருச்சியில் இருந்து பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் குமரி மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவது வழக்கம்.

இதேபோல் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதற்காக சீலன் என்ற குணசீலன், கோபிநாத், தயாகரன், குருவிந்தன், தர்ஷன், சத்தியசீலன், ராபின் பிரசாத், தயானந்தன், காந்தரூபன், பிரபாகரன், சுதர்சன், அய்யா என்ற அருள் இன்பத்தேவர், யோககுமார் ஆகிய 13 பேரும் பொலிஸ் வானில் திருச்சியில் இருந்து குமரி மாவட்டத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இவர்களின் பாதுகாப்புக்காக 10 பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு அளித்து 13 பேரையும் குமரி மாவட்டத்துக்கு அழைத்து வந்தனர்.

இதன்போது இறச்சகுளத்துக்கும், அழகன்கோணம் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் குறித்த வான் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் வயல்கள் அமைந்திருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் வேனில் இருந்த 10 பொலிஸாரும், இலங்கை அகதிகள் உள்ளிட்ட 13 பேரும் காயம் அடைந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஆசாரிபள்ளம் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அகதிகள் உள்ளிட்ட 13 பேரில் 8 பேர் படுகாயமடைந்ததுடன், 5 பேர் சிறு காயமடைந்தனர். விபத்து நடந்த விவரம் இரணியல் கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்கின் விசாரணை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரித்தானிய பெண் தேனிலவுக்காக இலங்கை வந்து கண்ணீர் விட்டழுத சம்பவம்!
Next articleபொலிஸாரி்ன் நெகிழ்ச்சியான காரியம்! முதியவரிடம் யாரும் நெருங்க முடியாதளவு நாற்றம்!