சுற்றுலா பயணிகளுக்கு சீகிரியா குன்றில் காணக் கிடைத்த அரிய காட்சி!

0

சீகிரியா மலைக்குன்றுக்கு விஜயம் மேற்கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அரிய காட்சி ஒன்றை பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

உலக சுற்றுலா தினமான நேற்று அதிகாலை 5 மணி முதல் சீகிரிய குன்றை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

வழமையாக காலை 7 மணிக்கு சீகிரியவை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படும் நிலையில் நேற்றையதினம் 5 மணிக்கு பார்ப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்று காலை 5 மணிக்கு சீகிரிய குன்றிற்கு ஏறிய உள்நாட்டு நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சூரியன் உதிக்கும் காட்சியை காண முடிந்துள்ளது.

கடந்த சில தினங்களாக மழை பெய்தமையினால் முகில்களினால் மூடப்பட்ட நிலை ஒன்றே காணப்பட்டுள்ளது. எனினும் நேற்று அதிகாலை 6 மணியளவில் சூரியன் உதிக்கும் காட்சியினை அவதானிக்க முடிந்துள்ளது.

சீகிரிய மலைக்குன்றில் இவ்வாறான காட்சியை காண்பது அபூர்வம் என சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபொலிஸாரி்ன் நெகிழ்ச்சியான காரியம்! முதியவரிடம் யாரும் நெருங்க முடியாதளவு நாற்றம்!
Next articleசிசிடிவியில் பதிவாகிய காட்சிகள்! பெண்ணொருவரின் மோசமான செயற்பாடு!