அவித்த வேர்க்கடலையை தினமும் இந்த அளவு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

0

வேர்க்கடலை அற்புதமான நொறுக்குத் தீனி. இதனை எண்ணெயில் பொரிக்காமல் ஆவியில் வேக வைத்து சாப்பிட வேண்டும். இதிலுள்ல சத்துக்கள் குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது.வேர்கடலையை பெரும்பாலோனோர் கொழுப்பு மிக்க உணவே என்று நினைக்கிறார்கள். உண்மையில் இதில் நல்ல கொழுப்பு அமிலங்களே உள்ளன.

இவை கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை அளவை குறைக்கும். இதன் நன்மைகளைப் பற்றி இங்கு காண்போம்.

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் :
வேர்க்கடலை நோய்களிலிருந்தும் தொற்றுகளிலிருந்தும் நம்மை காப்பாற்றும். குறிப்பாக ஹெபடைடிஸ், காசநோய் ஆகியவற்றிலிருந்து நம்மை காக்க தேவையான எதிர்ப்பு சக்தியை வேர்க்கடலை அளிக்கிறது

ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் :
அடிப்பட்டால் ரத்தம் உறையாமல் அதிக ரத்தப் போக்கு உண்டாகும் ஹீமோஃபீலியா போன்ற நோய் குணப்படுத்தும் ஆற்றக் கொண்ட்டது, மாதவிடாய்யினால் அதிக உதிரப் போக்கு உண்டாவதை தடுக்கலாம்.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான சத்தான விட்டமின் 3 நியாசின் வேர்க்கடலையில் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது

இளமையை அதிகரிக்கும் :
இது இளமையை நீட்டிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் உள்ள பாலிபீனால் செல் வளர்ச்சியை தூண்டி முதுமடையச் செய்வதை தடுக்கிறது.

பித்தப்பை கல்லைக் கரைக்கும்:
நிலக்கடலையை தினமும் 30 கி அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். ஆய்வுகள் தெரிவிக்கின்றன

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசர்க்கரை நோய், இதய பாதிப்பு என பல நோய்க்கு இதுதான் காரணம்! அதிரவைக்கும் உண்மைகள்!
Next articleபேக்கிங் சோடாவை கண்களைச் சுற்றி தடவுவதால் ஏற்படும் அற்புதங்கள்!