சர்க்கரை நோய், இதய பாதிப்பு என பல நோய்க்கு இதுதான் காரணம்! அதிரவைக்கும் உண்மைகள்!

0

நீங்களே சற்று யோசித்து பாருங்கள். 20 வருடங்களுக்கு முன்னர் இந்தளவு சர்க்கரை நோய் பாதிப்புகள் இருந்தனவா? இதய கோளாறுகள், இதய அறுவை சிகிச்சைகள், தனிப்பட்ட ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனைகள் இருந்ததா? 20 வருடங்களுக்குள் இவ்வளவு ஆரோக்கிய சீரழிவுகள் உண்டாக எவை காரணம்?

இயற்கை மரணம் அடைந்தார் என்ற செய்தியை நீங்கள் கடைசியாக கேட்டது எப்போது என்று நினைவிருக்கிறதா? நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகள் தான் பதப்படுத்தப்பட்ட பால், சுத்திகரிப்பு செய்த வெள்ளை அரிசி, சர்க்கரை, உப்பு. இவற்றுக்கும் மேற்கூறிய நீரிழிவு, இதய கோளாறுகளுக்கு என்ன தொடர்பு?நாள்ப்பட உடலில் பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கி, ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுகள் தான் இவை…

வெள்ளை சர்க்கரை!
பொதுவாக வெள்ளை சர்க்கரை கரும்பு மற்றும் கிழங்கு வகை உணவுகளில் இருந்து எடுக்கப்படுகிறது. இதிலிருந்து சர்க்கரை எடுக்கும் போது 90% நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் வெளியேற்றப்படுகின்றன.

தயாரிப்பு முறை!
வெள்ளை சர்க்கரை தயாரிக்கப்படும் போது அதில் கார்பன்டை ஆக்சைடு மற்றும் எலுமிச்சை சர்க்கரை ஜூஸில் சேர்க்கப்படுகின்றது. கொழுப்பு முழுமையாக நீக்க இதை செய்வதாய் கூறப்படுகிறது. இப்படி தயாரிக்கும் சர்க்கரையை உணவில் சேர்த்து சமைப்பதால், நமது உடலுக்கு எந்த நன்மையையும் விளைவதில்லை.

பதப்படுத்திய பால்!
பதப்படுத்தி விற்கப்படும் பாக்கெட் பாலில் நமது உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் என்ஸைம்கள் நீக்கப்பட்டுவிடுகின்றன. இப்படி தயாரிக்கப்படும் பாலை குடிப்பதால் நமது உடலுக்கு எந்தவிதமான நன்மையையும் இல்லை.

அயோடின்!
பதப்படுத்தி விற்கப்படும் பாலில் 10% அயோடின் நீக்கப்பட்டுவிடுகிறது. இதனால், மலம் கழிப்பதில் பிரச்சனைகள் உண்டாகலாம், மேலும், உடலுக்கு தேவையான பாலில் இருக்கும் முக்கிய திறன்கள் கிடைக்காமல் போகின்றன.

வெள்ளை அரிசி!
சுத்திகரிப்பு செய்து விற்கப்படும் வெள்ளை அரிசி உடனடியாக உடலில் க்ளுகோஸ் அளவை அதிகரிக்க கூடியது. இதனால் தான் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் அதிகரித்து வருகிறது.

உப்பு!
நாம் பயன்படுத்தி வரும் சுத்திகரிப்பு செய்து விற்கப்படும் உப்பு சோடியம் க்ளோரைடு ஆகும். இதனால் தான் இதய நோய்கள் மற்றும் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. மேலும், இதை தினமும் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல.

தவிர்க்க வேண்டியது அவசியம்!
நாம் அன்றாடம் உட்கொண்டு வரும் உணவுகள் தான் இந்த சுத்திகரிப்பு செய்த வெள்ளை அரிசி, சர்க்கரை மற்றும் உப்பு. இதற்கு பதிலாக உணவில் அதிகம் தானியங்கள், கரும்பு சர்க்கரை, மற்றும் இயற்கையாக எடுக்கப்படும் உப்பை பயன்படுத்த துவங்க வேண்டியது அவசியம்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅசிங்கமான பாத்ரூம் டைல்ஸ் கறையை ஒரே நிமிடத்தில் நீக்க வேண்டுமா?
Next articleஅவித்த வேர்க்கடலையை தினமும் இந்த அளவு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!