பார்வை நரம்புகளை பலப்படுத்தி கண்களுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள் இவை தான் !

0

முருங்கை பிஞ்சு, வழுதுணய்காய், பாசிப் பயறு, சுக்கு, சீரகம் போட்டு காய்ச்சிய குடிநீர், சுக்கு, மிளகு சேர்ந்த உணவு வகைகள், வெந்தயம், நீர்ச் சத்து மிகுந்த பூசணி, சுரைக்காய், புடலங்காய், கேரட், பீட்ரூட் உள்பட பச்சைக் காய்கறிகள். இந்த உணவு வகைகள் கண்களின் உறுப்புகளை நன்கு பலப்படுத்தி பார்வை நரம்புகளை பலப்படுத்தி நன்மை உண்டாக்கும்.

கண்களுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்: பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, வல்லாரை, கையாநத் கீரை (கரிசாலை), புளியாரைக் கீரை, நெய்ச்சட்டிக் கீரை, தூதுவளை கற்பம், செல் அழிவைத் தடுக்கும் சத்துள்ள கடற்பாசி.

பழங்கள்: மாம்பழம், எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, பப்பாளி.

காய்கறிகள்: முருங்கை பிஞ்சு, வழுதுணய்காய், பாசிப் பயறு, சுக்கு- சீரகம் போட்டு காய்ச்சிய குடிநீர், சுக்கு, மிளகு சேர்ந்த உணவு வகைகள், வெந்தயம், நீர்ச் சத்து மிகுந்த பூசணி, சுரைக்காய், புடலங்காய், கேரட், பீட்ரூட் உள்பட பச்சைக் காய்கறிகள். இந்த உணவு வகைகள் கண்களின் உறுப்புகளை நன்கு பலப்படுத்தி பார்வை நரம்புகளை வன்மைப்படுத்தி நன்மை உண்டாக்கும்.

பொதுவாக காய்களையும், கனிகளையும் உட்கொள்ளும் நாம், காய், கனி உருவாவதற்கு காரணமான பூக்களை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.
அப்படி நாம் ஒதுக்கிவிட்ட பூக்களுக்கு உள்ள மருத்துவக் குணங்களைப் இப்போது பார்ப்போம். பயனடைவோம்.

முருங்கைப் பூவைப் பயன்படுத்தினால் கண்கள் குளிர்ச்சி பெறும். உடல் உறுப்புகள் சீரான முறையில் வளர்ச்சியடையும். அதிகமான பித்தத்தை போக்கும்.

வாழைப் பூ கை, கால் எரிச்சல், இருமல், வயிற்றுக் கடுப்பு, வெள்ளை ஒழுக்கு போன்ற பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும்.

மாதுளம் பூ பித்த வாந்தியை நிறுத்தும் தன்மை கொண்டது. வயிற்றுக் கடுப்பு, இரத்த மூலம், உஷ்ணம் ஆகியவற்றைச் சீர் செய்யும். இது தவிர, மாதுளம் பழத்தோல் சீதபேதி, வாய்ப்புண், இரத்த பேதி போன்றவற்றிற்கு மருந்தாகும்.

அகத்திப் பூ வெயில் காரணமாக ஏற்படும் பித்தத்தை அகற்றும். உடல் அழற்சியை விலக்கும்.

வேப்பம் பூ நீடித்த ஏப்பம், வாந்தி, குடற்பூச்சிகள் ஆகியவற்றை அகற்றும்.

புளியம் பூவைச் சமையலுக்குப் பயன்படுத்தினால் பித்தம் அகலும். நாவின் சுவையின்மை நீங்கும்.

வெங்காயப் பூ குன்ம நோய்களை போக்கும், குடல் தொடர்பான பல பிணிகளை நீக்கும்.

பன்னீர்ப் பூ மித வாந்தியை நிறுத்தும், வயிற்று இசிவு, விந்துக்குறை, காய்ச்சல், வறட்சி, ஒக்காளம் போன்றவற்றை நீக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபல் வலி, பார்வை கோளாறு போக்கும் நந்தியா வட்டை !
Next articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 20.11.2019 புதன்கிழமை !