பப்பாளியை பற்றி தெரிந்துகொண்டால் நீங்கள் வெறுத்து ஒதுக்க மாட்டீர்கள்!

0
2134

எல்லா சீசன்களிலும் கிடைக்கும் பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள் அளப்பறியது. அதன் இலை, காய், விதை என அனைத்துமே பயன் தரக்கூடியது. பப்பாளியின் மருத்துவபயன்களை இப்போது பார்க்கலாம்.

சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாத்து இளமையை கூட்டும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும். பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும். பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும். பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும். பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

Previous articleஇலங்கையில் மகள் முன்னிலையில் கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனுக்கு மனைவி செய்த துரோகம்!
Next articleதினமும் காலையில் தேங்காய் எண்ணெய் வைத்து இதை செய்யுங்கள்! மறந்துவிடாதீர்கள்!