இலங்கையில் மகள் முன்னிலையில் கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனுக்கு மனைவி செய்த துரோகம்!

0

அம்மா அப்பாவின் வாயை தனது சேலையினால் அடைத்து விட்டார்.

ஹஷான் மாமா அப்பாவின் கழுத்தினை இறுக்கி பிடித்து நெறித்தார்.

அம்மா தடி ஒன்றினால் அப்பாவின் தலையில் பலமாக தாக்கினார்.

மனதை பதறவைக்கும் நிகழ்வு ஒரு மாதத்தின் பின்னர் உண்மை வெளியானது.

வெல்லம்பிட்டி பகுதியில் அம்மா அப்பா ஒரேயொரு மகள் என மூவரை கொண்ட குடும்பம் நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் 28 ஆம் திகதி குறித்த குடும்பத்தின் தலைவரான காமினி புசெல்லி ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்படுகின்றார்.

காமினியின் சடலம் மீட்கப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் காமினியின் மனைவி காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

27 ஆம் திகதி பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு தானம் வழங்க கடந்த 26 ஆம் திகதி அதிகாலை சென்ற தனது கணவரை காணவில்லை என முறைப்பாடு செய்துள்ளார்.

சடலம் மீட்கப்பட்டதனை தொடர்ந்து சடலம் உருகுலைந்து காணப்பட்டமையினால் தாக்கப்பட்ட அடையாளங்கள் எதனையும் காவல் துறையினரால் உறுதிபடுத்திக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் மரண வைத்திய பரிசோதனைகள் நிறைவு பெற்றதும் காமினியின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எனினும் காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.

காமினி தொடர்பில் அவர் வசித்த வீட்டிற்கு அருகில் உள்ளவர்களிடம் விசாரணைகளை நடத்தினர்.

இதன்போது கடந்த 26 ஆம் திகதி அதிகாலை ஐயோ… அம்மா என சத்தம் கேட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து காமினியின் மனைவியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தனது கணவரை தானே கொலை செய்ய முடியுமா என கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

அதனை தொடர்ந்து , காவல் துறையினர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து ஓரிரு தினங்களின் பின்னர் காமினியின் மகளை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவருக்கு இனிப்புக்கள் உள்ளிட்ட விளையாட்டு பொருட்களை பெற்று கொடுத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன் போது காமினியின் மகள் வாக்கு மூலத்தில் தெரிவித்த விடயங்கள் அனைவரின் மனதையும் பதறவைத்துள்ளது.

நான்…. எனக்கு விவரம் அறிந்த நாள் முதல் அம்மாவும் அப்பாவும் சண்டை பிடிப்பார்கள். சோற்றுக்கு உப்பில்லை என்றாலும் சண்டை பிடிப்பார்கள்… சில நாட்களில் அப்பா குடித்து விட்டு வருவார்.. அம்மாவை அடிப்பதாக சொல்வார் ஆனால் நான் பார்த்ததில்லை..

அம்மாவிற்கு ஹேண்ட் போன் ஒன்று இருக்கு.. அடிக்கடி கோல் வரும்.. ஆண் ஒருவரே தொடர்ந்து கதைக்கிறார் என்பதையும் அறிந்திருந்தேன்..கதைத்து முடிந்ததும் அம்மா இலக்கத்தை டிலீட் பண்ணிடுவாங்க..

ஒரு நாள் அம்மாவோட சந்தைக்கு போகும் போது ஹஷான் மாமா வந்தார்..அவர் குளிக்க போவோம் என கூறினார்… நான் முடியாது என்றேன்.. இருந்தாலும் அவர் எங்களை குளிக்க அழைத்து சென்றார்… நாங்கள் மூவரும் நீராடினோம்.

அப்பா வீட்டில் இல்லாத போதெல்லாம் ஹஷான் மாமா வீட்டுக்கு வருவார்.. அப்பா வீட்டுக்கு வரபோறதா கோல் பண்ணியவுடன் ஹஷான் மாமா சென்று விடுவார்..

வழமைபோல் அப்பா கடந்த 26 ஆம் திகதி 10.30 மணி இருக்கும் குடித்து விட்டுதான் வீட்டுக்கு வந்தார். இருவரும் சண்டை போட்டுகொண்டார்கள்… நான் தூங்கிட்டன்… பாதி தூக்கத்தில் இருந்த எனக்கு ஐயோ….. அம்மா என சத்தம் கேட்டது… அந்த சத்தத்தில் நான் எழும்பிவிட்டன்… கட்டிலில் இருந்து கீழே இறங்கி சென்ற போதுதான் பார்த்தன்… ஹஷான் மாமா வீட்டின் சாலையில் தூங்கிக்கொண்டிருந்த எனது அப்பாவின் கழுத்தினை நெறித்துக்கொண்டிருந்தார்.

அப்பொழுது அம்மா தடி ஒன்றினை கொண்டு அப்பாவின் தலையில் பலமாக அடித்தார்.. அப்பா வலியால் துடித்தார்.. நான் அழுதேன்.. அழக்கூடாது என இருவரும் என்னை அச்சுறுத்தினார்கள்… அச்சத்தில் நான் அழவில்லை.. கடவுளிடன் கேட்டன்… என்னுடைய அப்பாவை காப்பாற்றுமாறு.. என்ன செய்வதென அறியாது மூச்சடைத்து போனேன்….!

அப்பாவின் வாயும் சேலையால் கட்டப்பட்டிருந்தது…. அப்பாவின் துடிப்பு நின்று விட்டது.. அப்பா செத்து விட்டார் என எனக்கு தெரியும்… சத்தமிடவில்லை…. பின்னர் அப்பா அணிந்திருந்த சாரத்தினை அகற்றி விட்டு அவருக்கு ட்ரௌசர் ஒன்றும் சேர்ட் ஒன்றையும் அணிவித்தார் ஹஷான் மாமா…

அணிவித்ததன் பின்னர் அப்பாவை தூக்கி த்ரீவில் ஒன்றில் ஏற்றினார்கள்… பின்னர் என்னையும் அழைத்தார்கள். மூவரும் ஆட்டோவில் சென்று அப்பாவை தண்ணீரில் வீசிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தோம்….அப்பா தூங்கிக்கொண்டிருந்த மெத்தையில் அப்பாவில் இரத்த கரைகள் படிந்திருந்தன… அதனை ஹஷான் மாமா கத்தி ஒன்றினால் வெட்டிக்கொண்டு எடுத்து சென்று விட்டார்.

அம்மாவிடம் இது பற்றி கேட்டன்… அம்மா எதுவும் கூறாமல் யாரிடமும் எதுவும் தெரிவிக்க வேண்டாம் அவ்வாறு கூறினால் நானும் மரணித்து விடுவேன்… என கூறியதால் நான் எதுவும் தெரிவிக்கவில்லை.

ஒரு நாள் அம்மா அவருடைய ஹேண்ட் போனில் கதைத்துக்கொண்டிருக்கும் போது “போயா தினத்தன்று அதனை செய்வோம்” என கூறினார்… சில வேளைகளில் அப்பாவை கொலை செய்வதையே அவர்கள் தெரிவித்திருக்க வேண்டும் என சாட்சியமளித்துள்ளார்.

காமினி கொலை செய்யப்பட்ட விடயத்தினை மகள் வாயிலாக தெரிந்துகொண்ட காவல் துறையினர் காமினி மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஹஷான் ஆகியோரை கைது செய்துள்ளதுடன் அவர்களும் நேற்று முன்தினம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமருத்துவமனையிலிருந்து… கருணாநிதியின் சமீபத்திய படம் வெளியானது! மகிழ்ச்சியில் தொண்டர்கள்!
Next articleபப்பாளியை பற்றி தெரிந்துகொண்டால் நீங்கள் வெறுத்து ஒதுக்க மாட்டீர்கள்!