தினமும் காலையில் தேங்காய் எண்ணெய் வைத்து இதை செய்யுங்கள்! மறந்துவிடாதீர்கள்!

0

உடல் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு இயற்கை அளித்த ஆயுர்வேத மருந்து தேங்காய் எண்ணெய் ஆகும்.

எண்ணற்ற பலன்களை தரும் தேங்காய் எண்ணெய், வாய் புண், துர்நாற்றம், பல் கோளாறு, ஈறு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு அழிப்பது நம்மில் பலருக்கு தெரியாது.

தினசரி தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

பற்குழிகளை பாதுகாக்க, பல் இடுக்குகளில் படிந்திருக்கும் தகடுகளை நீக்க மற்றும் வாய் துர்நாற்றத்தை போக்குவதில் தேங்காய் எண்ணெய் பெரும் பங்கு வகிப்பதாக ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாகவே எண்ணெய்களில் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது. இதனால் பற்களை வெள்ளையாக்க செயற்கை கிரீம்களை உபயோகிப்பதை தவிர்த்து தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது.

வாய் வழியாகத் தான் கிருமிகள் உடலுக்குள் செல்வதாக கூறப்படுகிறது. தினசரி காலை தேங்காய் எண்ணெயால் வாய் கொப்பளித்தால் பற்களும் புத்துணர்ச்சி பெறும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். தேங்காய் எண்ணெய் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதனால் தொற்றுக்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது.

பற் சிதைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேங்காய் எண்ணெய் மிகச் சிறந்த மருந்தாகும். பற் சிதைவு, ஈறு பிரச்னைகளை உண்டாக்கும் அரிய வகை பாக்டீரியாவை அழிக்கும் சக்தி தேங்காய் எண்ணெய்க்கு உண்டு.

தினசரி காலையில் பல் துலக்கிய பின் தேங்காய் எண்ணெயை வாயில் வைத்து கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். இதற்காக பற்களில் தேங்காய் எண்ணெய் வைத்து தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை.

அனைத்தையும் செய்ய ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் மட்டும் எடுத்துக் கொண்டால் போதுமானது. தினசரி 5 நிமிடம் வரை செய்ய தொடங்கி படிப்படியாக 20 நிமிடங்கள் வரை தேங்காய் எண்ணெயால் வாய் கொப்பளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபப்பாளியை பற்றி தெரிந்துகொண்டால் நீங்கள் வெறுத்து ஒதுக்க மாட்டீர்கள்!
Next articleலிம்போமா என்று அழைக்கப்படும் கொழுப்புக் கட்டிகளை கரைக்க சிறந்த‌ ஓர் வழி!