பக்கவாதம் வராமல் தடுக்கணுமா! இதனை மட்டும் செய்திடுங்க!

0

பக்கவாதம் அல்லது பாரிசவாதம் (stroke) என்பது மூளைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் குழாய்களில் தடை ஏற்படுவதனால் மூளைக்குக் குருதி செல்வது தடைப்பட்டு மூளையின் செயற்பாடுகள் மிகவிரைவாக இழக்கப்படுவதைக் குறிக்கும்.

இதனால் ஆக்சிஜன் கிடைக்காது. பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் மூளையின் செல்கள் இறக்கத் தொடங்குகின்றன.

இதனால் கை, கால் அசைவின்மை, பேச முடியாமை போன்ற பல தாக்குதல்கள் ஏற்படுகின்றன. இவற்றினைத் தவிர்க்க கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறையை பின்பற்றினாலே போதும்.

உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் எப்பொழுதும் இதனை மருத்துவ அறிவுரைப்படி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தற்போது பக்கவாதத்தினை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

  • கொலஸ்டிரால் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
  • இருதய நோய் பாதிப்பு உடையவர்கள் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
  • சர்க்கரை நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் கூடுதல் என்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
  • மது பழக்கத்தினையும், புகை பிடித்தலையும் அடியோடு நிறுத்தி விடுவது நல்லது.
  • அதிக எடை இல்லாமல் சரியான எடையில் உடல் இருக்க வேண்டும்.
  • அதிக மன உளைச்சல் இல்லாது இருப்பது மிக அவசியமாகும்.
  • முதுமை பக்கவாதத்திற்கு கூடுதல் காரணம் ஆகின்றது. என்றாலும், ஆரம்ப காலத்தில் இருந்தே நம்மை முறையாக பாதுகாத்துக் கொண்டால் பக்கவாத தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநரை முடியை கருப்பாக்க வேண்டுமா! பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணுங்க!
Next articleதினமும் உணவில் சுண்டைக்காயை சேர்த்து கொள்ளுங்கள்! நன்மைகள் ஏராளமாம்!