தினமும் உணவில் சுண்டைக்காயை சேர்த்து கொள்ளுங்கள்! நன்மைகள் ஏராளமாம்!

0

நாம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

சுண்டைக்காயில் மிக அதிக அளவில் வைட்டமின் பி, வைட்டமின் சி உள்ளது.

இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியத்தை காத்து, நீண்ட ஆயுளை கொடுக்கிறது.

மேலும் 100 கிராம் சுண்டைக்காயில் கிட்டதட்ட 22.5 கிராம் அளவுக்கு இரும்புச்சத்தும் 390 மில்லி கிராம் அளவுக்கு கால்சியமும் 180 மில்லி கிராம் பாஸ்பரசும் நிறைந்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

  • சுண்டைக்காய் வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. மூலத்தின் மூலம் ஏற்படுகிற வலி, கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட வயிற்றுக் கோளாறுகளை நீக்கும் தன்மை கொண்டது.
  • காய்ச்சல் இருக்கும் பொழுது சுண்டைக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயைச் சேர்த்துக் கொள்வதன் மூலமாக ரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்யும்.
  • உடலில் உண்டாகிற காயங்களையும் புண்களையும் ஆற்றுகின்ற குணமும் இந்த சுண்டைக்காய்க்கு உண்டு. வாய்வுப் பிடிப்பு உள்ளவர்கள் அடிக்கடி இந்த சுண்டைக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது.
  • சுண்டைக்காயை மாதத்துக்கு இரண்டு முறையாவது குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், வயிற்றுப்புழுக்கள் போன்ற பிரச்னைகள் எதுவும் இருக்காது.
  • தினமும் 20 சுண்டைக்காய் வற்றலை நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட்டு வர வேண்டும். இதை சில வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தாலே போதும். தீராத ஆஸ்துமாவும் கட்டுக்குள் வந்துவிடும்.
  • மூல நோய் இருப்பவர்கள் வாரத்துக்கு மூன்று நாட்கள் சுண்டைக்காயை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால், கடுப்பு நீங்கும். மூலத்தால் உண்டாகும் ரத்தக்கசிவு நின்று போகும். புளித்த ஏப்பம், உடல் சோர்வு ஆகியவையும் பறந்து போய்விடும்.
  • சுண்டைக்காய் வற்றல் சூரணம் ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து தினமும் மோரில் கலந்து குடித்து வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்சினைகளும் தீர்ந்து போகும். சிறுநீரைப் பெருக்கும் ஆற்றல் கொண்டது. கல்லீரல் மற்றும் மண்ணீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும்.
  • சுண்டைக்காயில் கசப்புத் தன்மை அதிகமாக இருப்பதால் ரத்தம் சுத்திகரிக்கப் படுவதோடு, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபக்கவாதம் வராமல் தடுக்கணுமா! இதனை மட்டும் செய்திடுங்க!
Next articleஇனி மறந்தும் இந்த 5 பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்!