நான் முதலமைச்சர் ஆனால்! தர்மம், நியாயம் ஜெயிக்கும்! . நடிகர் விஜய் ஏன் இப்படி பேசினார் தெரியுமா?

0

சர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய அரசியல் கருத்துக்கள் வைரலாகி உள்ளது.

நேற்று சென்னையில் சர்க்கார் பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் இந்த படம் அரசியல் பேசும் படமாக இருக்க போகிறது. நேற்று உண்மையாகவே விஜய் பேசியது அவர் வாழ்க்கையில் மிக முக்கியமான பேச்சாகும். படம் பேசுகிறதோ இல்லையோ, விஜய் இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் சக அரசியல் பேசினார். விஜய்யின் இந்த பேச்சு கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருக்கும் சக நடிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நண்பர்கள்
எப்போதும் ரசிகர்களாக இருக்கும் விஜய்யின் ரசிகர்கள் இந்த முறை அவருக்கு ”நண்பா, நம்பி” ஆகிவிட்டார்கள். இந்த வார்த்தை எல்லோருக்கும் பதிய வேண்டும் என்பதற்காகவே அடுத்தடுத்து அதை திரும்ப சொன்னார். ரசிகர்களை நண்பர்களாக மாற்றியதே பெரிய அரசியல்தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். எல்லோருடனும் சேர்ந்து பயணிக்க திட்டமிட்டே, இப்படி விஜய் பேசியுள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

மறைமுகமாக தாக்கினார்
”மெர்சல்ல கொஞ்சம் அரசியல் இருந்தது, இங்க அரசியல்ல மெர்சல் பண்ணி இருக்கோம்” என்று தொடங்கிய விஜயின் அரசியல் பேச்சு மறைமுகமாக பல விஷயங்களை கூறியது. தற்போதைய ஆட்சியை விமர்சிப்பது தொடங்கி, தன்னுடைய எதிர்கால அரசியல் திட்டத்தை சொன்னது வரை மறைமுகமாகவும், நேரடியாகவும் பல விஷயங்கள் பேசியுள்ளார். நான் வெற்றி பெற வேண்டும் என்று உழைக்கிறேன், சில கூட்டம் நாம் வெற்றி அடையக்கூடாது என்றே உழைத்துக் கொண்டே இருக்கிறது, என்று மறைமுகமாக சிலரை தாக்கியும் பேசினார்.

புடிச்ச ஓட்டு போடுங்க
யாரும் கேட்காமல் அவராகவேதான் அரசியல் குறித்து பேச தொடங்கினார். தன்னுடைய எதுகை மோனை ஸ்டைலில் கொஞ்சம் தூக்கலாகவே அரசியல் கலந்து இருந்தார். அப்போது, தேர்தல்ல எல்லாம் போட்டியிட்டு சர்க்கார் அமைப்பாங்க, நாங்க சர்க்கார் அமைத்துவிட்டு தேர்தலை நிற்க போறோம். புடிச்சு இருந்தா ஓட்டு போடுங்க என்று இழுத்துவிட்டு ”படத்திற்கு சொன்னேன்” என்று பேச்சை மாற்றினார்.

முதலமைச்சர் ஆன நடிக்கமாட்டேன்
இப்படி வரிசையாக பேசிக்கொண்டே இருக்கும் போதுதான், நீங்க முதலமைச்சரா நடிச்சு இருக்கீங்களா சர்க்கார்ல என்றும் கேள்வி கேட்கப்பட்டது. நான் முதலமைச்சரா நடிக்கல, நிஜத்துல முதலமைச்சர் ஆனா, முதலமைச்சரா நடிக்க மாட்டேன், உண்மையா இருப்பேன் என்று கூறினார். இவர் கூறிய ”உண்மையா இருப்பேன்” என்ற வசனம்தான் பல அரசியல் தலைவர்களை சீண்டி இருப்பதாக தகவல் வருகிறது.

ஊழலை ஒழிப்பேன்
அது மட்டுமில்லாமல், அரசியலுக்கு வந்தால் (கற்பனையாக) ஊழலை ஒழிப்பேன் என்று கூறியுள்ளார். ”ஒழிப்பது கஷ்டம்தான் ஆனால் ஒழிப்பேன்” என்றும் கூறியுள்ளார். மேலே இருக்குறவங்க சரியா இருக்கணும். தலைவன் நல்லா இருந்தா கட்சி நல்லா இருக்க போகுது. நல்லவர்கள் நல்லவரை பின்பற்றுவார்கள் என்று கூறி பல அரசியல் கட்சிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் சீண்டி இருக்கிறார்.

நியாயம் ஜெயிக்கும், தர்மம் ஜெயிக்கும்.
விஜய் கடைசியில் பேச்சை முடித்த விதம்தான் அருமை. தர்மம் ஜெயிக்கும், நியாயம் ஜெயிக்கும், ஆனா லேட்டா ஜெயிக்கும். புழுக்கம் வந்தா மழை வரும். அந்த மாதிரி ரொம்ப நெருக்கடி ஏற்பட்டா ஒருத்தன் வருவான். அவன் லீடரா மாறுவான். அவன் தலைவன் ஆவான். அதான் இயற்கை. அந்த இயற்கையை ஒன்னும் பண்ண முடியாது. அவனுக்கு கீழ நடக்குற சர்க்கார் வேற மாதிரி இருக்கும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு தனது பேச்சை முடித்து இருக்கிறார் விஜய். இவரின் இந்த பேச்சு பல அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசோகத்திற்கு காரணம் என்ன? திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் தற்கொலை!
Next articleஇளைஞன் ஒருவன் காதலியை தேடிச் சென்ற போது ஏற்பட்ட‌ பரிதாபம்!