பேரீட்சை பழம் டயட்டை பின்பற்றுங்கள்: 15 நாளில் பலன்!

0

பேரீச்சை பழத்தில் அதிக அமினோ அமிலங்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், காப்பர், மெக்னீசியம், சோடியம், ஃப்ரக்டோஸ், குளுகோஸ், சுக்ரோஸ், விட்டமின் A, B1, B12, C, நியாசின் மற்றும் எண்ணெய் சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளது.

எனவே இதை டயட் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண்பதுடன் பல நன்மைகளை பெறலாம்.

தேவையான பொருட்கள்

பேரீட்சை – 2

பசும் பால் – 1 கப்

மஞ்சள் – 1 சிட்டிகை

தேன் – 1 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை
காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான பசும் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், 1 ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

அதன் பின்னர் 2 பேரீச்சைப்பழத்தை சாப்பிட வேண்டும், இதுபோலவே இரவும் குடிக்க வேண்டும், இப்படி தினமும் செய்யும் போது 15 நாட்களிலேயே உடல் எடையில் நல்ல பலன் தெரியும்.

பேரீட்சை டயட்டை எப்படி எடுத்துக் கொள்ளலாம்?

காலை- 2 பேரீட்சை மற்றும் மஞ்சள் பால்.

மதியம்- பச்சைக் காய்கறிகளுடன் குறைவாக அரிசி சாதம்.

மாலை- தேநீர் மற்றும் கோதுமை நிறைந்த பிஸ்கட்.

இரவு- 2 பேரீட்சை மற்றும் மஞ்சள் பால் அதனுடன் வேகவைத்த பீன்ஸ் அல்லது மீன்.

இந்த டயட்டை சரியாக 1 மாதம் பின்பற்றி வந்தால் தொப்பை மற்றும் உடல் எடை குறைவதை காணலாம்.

நன்மைகள்
பேரீச்சையில் அதிக டயட்ரி புரதங்கள் உள்ளதால், அதிகப்படியான பசி உணர்வு ஏற்படுவதை தடுக்கிறது.

பேரீச்சம் பழத்தில் உள்ள நல்ல கொழுப்புக்கள், உடல் பாதிப்புகளை சரிசெய்து, உள்ளுறுப்பு காயங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவினால் ஏற்படும் நோய்களின் பாதிப்புகளை தடுக்குகிறது.

பேரீச்சையில் உள்ள புரதச்சத்து தேவையற்ற கொழுப்புகளை மறைத்து தசை வடிவத்தை மாற்றி, ஆரோக்கியமான தசைக் கட்டமைப்பை உருவாக்குகிறது.

பேரீச்சை பழத்திலுள்ள ஃபீனாலின் பண்புகள், இன்சுலினை சுரக்க தூண்டி, சர்க்கரையை ஒழுங்குப்படுத்தி சர்க்கரை நோயை தடுக்கிறது.

உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரித்து, ரத்த சோகை, சளி, காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகியவை வராமல் தடுக்கிறது.

தூசி, புகை, சிறிய பூச்சி கடி ஆகியவற்றினால் உடலில் ஏற்படும் அலர்ஜி போன்ற சரும பாதிப்பு மற்றும் இதய நோய் வராமல் தடுக்கிறது.

குறிப்பு
பேரீச்சை பழம் பிளவு படாமல் இருப்பது நல்லது, சுருக்கங்களோடு உள்ள பேரீச்சை தரமானதாக இருக்கும், ஆனால் அவற்றில் நாற்றம் அல்லது வாசனை வரக்கூடாது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசர்க்கரை நோயாளிகள் முட்டைகோஸ் சாப்பிடுவது நன்மையா? பசியை தூண்டுமா?
Next articleஇதயநோயே வராமல் தடுக்க காலையில் இதை செய்யுங்கள்!