இதயநோயே வராமல் தடுக்க காலையில் இதை செய்யுங்கள்!

0

இதயத்தைச் சீராக இயங்க வைக்க மற்றும் பாதுகாக்க கார்டியோ பயிற்சிகளில் உள்ள ஸ்டெப்பர் (Stepper), லேடார் (ladder) வகை பயிற்சிகளை தினசரி காலையில் செய்து வர வேண்டும்.

ஸ்டெப்பர் பயிற்சியில் மூன்று வகையும், லேடார் பயிற்சியில் நான்கு வகையும் உள்ளது. அவைகள்,

கிக் ஃப்ரன்ட் (Kick Front)
ஸ்டெப்பரில் ஏறி, நேராக நின்று வலது காலை, எட்டி உதைப்பது போல் நேராக நீட்டி பழைய நிலைக்கு வர வேண்டும். இதேபோல் இடது காலுக்கும் செய்ய வேண்டும்.

சைடு ரன் (Side Run)
ஸ்டெப்பரின் பக்கவாட்டில் நின்று, இடது காலை எடுத்து ஸ்டெப்பர் மீது வைத்து நேராக நின்று ஸ்டெப்பரின் மீது ஏறி இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் வேகமாக ஏறி இறங்கி பயிற்சி செய்ய வேண்டும்.

ஜம்ப் அண்ட் ஸ்குவாட் (Jump & Squat)
ஸ்டெப்பரின் பின், நேராக நின்று ஸ்டெப்பரின் மீது குதித்து, பாதி அமர்ந்த நிலையில் நின்று கொண்டு பின்னோக்கி குதித்து பழைய நிலைக்கு வர வேண்டும்.

பலன்கள்
இதயத் துடிப்பு சீராகும்.
கொழுப்பு மற்றும் உடல் எடை குறையும்.
ஹார்மோன்கள் சீராகி மன அழுத்தம் குறையும்.

ஜம்ப்பிங் அண்ட் ரன்னிங் (Jumping & Running)
தரையில் கயிற்றால் ஆன ஏணியை விரித்து அல்லது தரையில் ஏணி போல் வரைந்து, கட்டத்துக்குள் நேராக நின்று அதன் இடைவெளிகளுக்குள் கால்களின் முட்டிகளை நன்கு உயர்த்தி நேராக குதித்து ஓட வேண்டும்.

ஜம்ப்பிங் ஜாக் (Jumping Jack)
தரையில் கயிற்று ஏணியை விரித்து, அதன் மீது நேராக நின்று அந்த ஏணிகளின் இடைவெளியில் நேராக குதிக்க வேண்டும். பின் இரண்டு கால்களும் கட்டத்துக்கு உள்ளே இருக்குமாறு, குதித்தபடி கால்களைக் கட்டத்துக்கு வெளியே வைத்து மாற்றி மாற்றி குதித்து முன்னேற வேண்டும்.

ஹாபிள் (Hobble)
கட்டத்துக்குள், ஒரு காலை உயர்த்தியடியே குதித்துச் செல்ல வேண்டும். இரண்டு கால்களுக்கும் தலா 15 முறை செய்ய வேண்டும்.

சைடு ரன் (Side Run)
கயிற்று ஏணியின் மீது பக்கவாட்டில் செல்லும்படி நேராக நின்று பக்கவாட்டில் கட்டங்களுக்கு இடையே தாவியபடி, இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் ஓட வேண்டும்.

பலன்கள்
இதய அடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.
புதிய ரத்த நுண் குழாய்கள் உருவாகும்.
சுவாசம் சீராகுவதுடன், உடலில் ஆற்றல் அதிகரிக்கும்.
மூளை மற்றும் முதுகுத்தண்டு இணைப்புகள் வலிமையாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபேரீட்சை பழம் டயட்டை பின்பற்றுங்கள்: 15 நாளில் பலன்!
Next articleபித்தப்பையை தாக்கும் ‘சைலண்ட் ஸ்டோன்’ பற்றிய அதிர வைக்கும் உண்மைகள்!