Home Patti Vaithiyam நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஓர் இயற்கை மருந்து! எல்லா நோய்களுக்குமான‌ நிவாரணி!

நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஓர் இயற்கை மருந்து! எல்லா நோய்களுக்குமான‌ நிவாரணி!

0
721

வைத்தியரிடம் சென்றால் ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு விதமான மருந்துகள் கொடுப்பார்கள். ஆனால் நம்முடைய முன்னோா்கள் இயற்கையான வழியில், எல்லா நோயையும் தீர்க்கும் ஒரு மருந்தை பரிசீலிக்கிறார்கள். அதென்ன அப்படி ஓர் அதிசய மருந்து.

வெந்தயம். – 250 gm
ஓமம் – 100 gm
கருஞ்சீரகம் – 50 gm
மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இப் பொடியை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

தினமும் இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது,இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் சாிசெய்து சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது. எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.

ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது,கண் பார்வை தெளிவடைகிறது,

முடி வளர்ச்சி நன்றாக இருக்கும் ,மலச்சிக்கல் நீங்குகிறது,ஞாபக சக்தி அதிகாிக்கும்,    கேட்கும் திறன் அதிகரிக்கிறது,
பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது,ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.

நீரிழிவு நோய்க்கு நல்ல நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்திற்கும் நல்ல தீா்வு கிடைக்கும் குறைகிறது.

By: Tamilpiththan

Previous articleஅக்கு பங்சர் சிகிச்சை என்றால் என்ன? இதோ அறிந்துகொள்ளுங்கள்!
Next articleஇன்றைய ராசிபலன் 26.5.2018 சனிக்கிழமை!