தேனில் ஊறிய பூண்டினை வெறும் வயிற்றில் இன்றும் அதிகாலையில் சாப்பிடும் சீன அழகிகள்! ஏன் தெரியுமா தமிழர்களே?

0

நாம் சாப்பிடும் உணவில் தான் உடல் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது. அதோ நம் உடலில் ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளை நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளிலிருந்தே தவிர்க்க முடியும்.

சில உணவு முறைகளை தினமும் சீன அழகிகள் கடைப்பிடிக்கின்றார்களாம்.

தினமும் காலையில் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் உடலுக்கு நன்மைகள் ஏற்படும். ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்துகிற பொருட்களைக் கொண்டே மருத்துவம் பார்க்கப்பட்டது.

அப்போதிருந்தே பூண்டு மற்றும் தேன் இரண்டையும் மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுத்தி வந்தனர். அதேபோல் எகிப்து, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இவையிரண்டும் சிறந்த மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தயாரிப்பு முறை

உங்களுக்கு தேவையான அளவு பூண்டு எடுத்து நன்றாக தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். கண்ணாடி பாட்டிலில் அதனைப் போட்டு பூண்டு மூழுகும் அளவுக்கு தேன் ஊற்ற வேண்டும்.

குறைந்தது ஒரு நாள் முழுவதுமாவது பூண்டு தேனில் ஊறவேண்டும். இதற்கு கெமிக்கல் கலப்படமில்லாத தூய தேன் வாங்குவது சிறந்தது.

வைரஸ் காய்ச்சல்

பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் போன்றவற்றை தவிர்க்க முடியும். பூண்டு இன்ஸுலின் சுரப்பை அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

பூண்டில் “அலிசின்” என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதில் பூண்டு முதன்மையானது. அதைத் தவிர அஜீரணம், வாயுத்தொல்லை, ரத்த அழுத்தம் போன்றவற்றையும் நீக்க பெரிதும் உதவுகிறது.

மாரடைப்பு

வயது ஏற ஏற, விரிவடையும் திறனை தமனிகள் இழக்கத் தொடங்குகிறது. இதனை குறைக்க பூண்டு முக்கியப் பங்காற்றுகிறது. மேலும், ஆக்சிஜன் இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் இதயத்தை காக்கும். பூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். அதே போல பூண்டில் உள்ள அஜோனின் இரத்த உறைதல் எதிர்ப்பி குணங்களால், இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும்.

பல்வேறு பிரச்சனைகள்

இதில் உள்ள இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும் இதனால் வயிறு மந்தமாக இருப்பது, சோர்வு,பசியின்மை போன்ற பிரச்சனைகளை இது தீர்த்திடும்.

இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு,

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோக்ளைசீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் இது மிகுந்த பயனுள்ளது.

பாரம்பரியம்

பண்டைய காலம் முதலே பூண்டு வெறும் உணவாக இன்றி, மருத்துவ பொருளாக தான் பயன்படுத்தி வரப்படுகிறது.

எகிப்தில் இருந்து நமது தமிழ் கலாச்சாரம் வரை பூண்டை ஓர் மருத்துவ பொருளாக தான் பயன்படுத்தியுள்ளனர்.

பண்டைய கிரேக்கத்தில் விளையாட்டு மற்றும் போர் வீரர்களின் உடற்திறனை மேம்படுத்து பூண்டை பயன்படுத்தி வந்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசாலையில் நடந்து செல்லும் போது இந்த பொருட்களை தயவுசெய்து மிதிச்சிடாதீங்க! துரதிர்ஷ்டத்தையும், பாவத்தையும் உண்டாக்குமாம் !
Next articleகொத்து கொத்தாக கொட்டிய முடியை கிடு கிடுனு வளர வைக்க நகங்களை இப்படி தேய்ங்க! தமிழனின் அறிவியல் கண்டுப்பிடிப்பு !