தினமும் ஒரு கிவி பழம் இவ்வளவு நன்மைகளா?

0

கிவி பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வருவதால் இதய நோய்களை தடுக்கும்.

கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. தினமும் ஒரு கிவி பழம் சாப்பிட்டு வந்தால் மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும். கிவி பழத்தில் பொட்டாசியம் அதிகளவில் இருக்கிறது. ஆனால் கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் இதய நோய் வராமல் தடுக்கிறது.

கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இதனால் ‘ஆன்டிஆக்ஸிடன்ட்’ அதிகமாவதால் ஆரோக்கியமான இதயத்தையும் தருகிறது.

கிவி பழத்தில் போலிக் அமிலம் அதிகமாக இருப்பதால் கர்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது. குழந்தைகளுக்குச் செல்லும் நரம்புக்குழலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதோடு, கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான வைட்டமின்களையும் தருகிறது.

உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்வதற்கு கிவி சிறந்தது. இதில் உள்ள இரும்புச்சத்து பசியையும், செரிமானத் தன்மையையும் அதிகரிக்கச் செய்கிறது. இரும்புச்சத்து இரத்தக்கொழுப்பை குறைப்பதோடு இதய நோய் மற்றும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது

கிவி பழத்தில் ஆரஞ்சை விட அதிக விட்டமின் சி யும், வாழைப்பழத்தை விட அதிக பொட்டாசிய சத்தும் உள்ளது. அதேபோல், அவகாடோவை விட அதிக அளவு விட்டமின் ஈ கொண்டுள்ளது. அதோடு உடலுக்கு தேவையான காப்பர், மேங்கனீஸ் ஆகியவைகளும் உள்ளது.

நார்சத்து :

கிவி பழத்தில் அதிக நார்சத்து உள்ளது. குடலின் ஆரோக்கியமான இயக்கத்திர்கு நார்சத்து அவசியம். கிவி பழம் தினமும் சாப்பிடுவதால் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றிவிடும்.

இது தவிர கிவி பழத்தில் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. உடலில் உண்டாகும் கிருமிகளை கொல்கிறது. அதோடு மேலாக ஜீரணத்தை உண்டாக்கும் என்சைம்களின் செயல்களை தூண்டுகிறது. இவ்வளவு நன்மைகளை தரும் இந்த கிவி ஒரு அற்புத பழம்தானே? இப்போ சொல்லுங்கள்.

இரும்பு சத்து :

கிவி பழத்தி 4 சதவீத இரும்பு சத்து உள்ளது. தினமும் அதனை பெரியவர்களும் குழந்தைகளும் சாப்பிட்டால் ரத்த சோகை எற்படாமல் காக்கும்,. கர்ப்பிணிகள் எடுத்துக் கொண்டால் ரத்த உற்பத்தி ரெட்டிப்பாக்கும்.

போலிக் அமிலம் :

ஃபோலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு மிக முக்கிய தேவையான சத்து. இது அதிகம் கிவி பழத்தில் உள்ளது. மருந்துக்களை நாடாமல் இதனை உண்ணலாம். ரத்த செல்களை அதிகரிக்கும். உடலில் சக்தி இழக்கும் தருணங்களில் பலத்தை தூண்டும்.

கால்சியம் :

கால்சியம் நம் உடலை தாங்கும் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கும், உருவாவதற்கும் தேவை. இது கிவி பழத்தில் அதிகம் உள்ளது. இதில் மெக்னீசியமும் அதிகம் உள்ளது. இது செல்களின் இயக்கங்கள் நன்றாக செயல்பட மற்றும் கால்சியம் சத்துக்களை உறிய தேவைப்படுகிறது.

விட்டமின் சி மற்றும் பொட்டாசியம் :

கிவி பழத்தில் ஆரஞ்சை விட அதிக விட்டமின் சி யும், வாழைப்பழத்தை விட அதிக பொட்டாசிய சத்தும் உள்ளது. அதேபோல், அவகாடோவை விட அதிக அளவு விட்டமின் ஈ கொண்டுள்ளது. அதோடு உடலுக்கு தேவையான காப்பர், மேங்கனீஸ் ஆகியவைகளும் உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! பயனுள்ள மருத்துவ குறிப்புக்கள் தினம் தினம் பார்த்து பயன் பெற எங்கள் பக்கத்தை லைக் ஷேர் செய்யுங்கள்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகாதில் உள்ள அழுக்கை நீக்குவதால் இவ்வளவு ஆபத்தா?
Next articleஅண்ணனை அடித்துக் கொன்ற தம்பி! யாழில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்!