காதில் உள்ள அழுக்கை நீக்குவதால் இவ்வளவு ஆபத்தா?

0

காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்வதால் நோய் தொற்றுக்கள் ஏற்படுத்துவதுடன் கேட்கும் திறனும் பாதிப்படைகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

காதில் உள்ள மெழுகு போன்ற படலம் நம் காதுகளை தூசு மற்றும் மாசுக்களில் இருந்து பாதுகாக்கவே உருவாகிறது. அதனால் காதில் உள்ள தூசி மற்றும் அழுக்கை எடுக்கவோ, குறிப்பாக காட்டன் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யவோ கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

காதில் உள்ள அழுக்கை எடுக்க காது குழாய் வழியாக பட்ஸை விடும் போது, நாம் கொடுக்கப்படும் அழுத்தம், காதில் நோய் தொற்றுக்களை ஏற்படுத்துவதுடன் கேட்கும் திறனையும் பாதிக்கிறது. எனவே காதில் உள்ள மெழுகு படலம் அதிக அளவு உருவாகி காதின் மேற்புறத்தில் வரும் போது மட்டுமே காதை சுத்தம் செய்ய வேண்டும்.

இதை கண்டிப்பாக நாம் எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் நம் காது கண்டிப்பாக பாதிக்கப்படும். குறிப்பாக காட்டன் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதைராய்டு பிரச்சனைக்கு எளிய வீட்டு மருத்துவம்!
Next articleதினமும் ஒரு கிவி பழம் இவ்வளவு நன்மைகளா?