தினமும் இஞ்சி டீ குடிப்பதால் பெறும் அற்புதமான நன்மைகள்!

0

தேநீர் குடிப்பதால், மனம், மூளை சுறுசுறுப்படையும் அதுவும் இஞ்சி டீ குடித்தால் உற்சாகம் இரண்டு மடங்காகிவிடும் இஞ்சிக்கு மிஞ்சிய மருந்தில்லை என்று முன்நோா்கள் சொல்வாா்கள்
என்பதற்கிணங்க இஞ்சி டீ யிலுள்ள விசேஷ குணங்களை பார்ப்போம்.

இஞ்சியில் விட்டமின் ஏ,சி ஈ,மற்றும் பி காம்ப்ளெக்ஸ் உள்ளது, அதோடு மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, கால்சியம் போன்ற கனிம சத்துக்களும் அடங்கி உள்ளன.

இஞ்சி டீ செய்யும் முறை:

தேவையானவை
தோலை நீக்கிய இஞ்சித் துண்டுகள் 1, 2
கப் நீர் 1 1/2 கப்
எலுமிச்சை சாறு 2 துளிகள்
தேன் தே.க 1
இஞ்சியின் தோலை முழுவதுமாக நீக்கி இடித்து ஒன்றரை கப் அளவுள்ள நீாிலிட்டு கொதிக்க வைய்யுங்கள்.5 நிமிடங்கள் நன்றாக கொதித்த பின் வடித்து எலுமிச்சை சாறு ,தேன் கலந்து வெதுவெதுப்பான நிலையில் அருந்தினால் பசியுணர்வு அதிகாிக்கும், சளி தொந்தரவு உள்ளவா்களுக்கு நிவாரணியாக செயல்படுகிறது,

நீரில் இஞ்சியைக் கொதிக்க வைக்கும் போது, கூடவே பட்டை,புதினா இலையை போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.இஞ்சி டீ நாளுக்கு 2 முறை அருந்தினால் போதும். அதற்கு மேல் குடிக்க வேண்டாம்.

இஞ்சி டீ குடிப்பதால் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, செல் வளர்ச்சியை தூண்டும். சிறந்த வலி நிவாரணி அதாவது நம் உடலில் காக்ஸ்-2 என்ற என்ஸைம் தான் வலியைத் தருகிறது, அதன் செயலை தடுத்து வலியை குறைக்கச் செய்கிறது.

ஆஸ்துமா நோய் உள்ளவா்கள் தினமும் இஞ்சி சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் , ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

இஞ்சி டீயை தினமும் எடுத்துக் கொள்ளும் போது, ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ், முடக்கு வாதம், கீல்வாதம் ஆகிய எலும்பு சம்பந்தபட்ட வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கிறது.

இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நெற்றியில் தடவினால், ஒற்றைத் தலைவலிக்கு தீர்வு கிடைக்கும்.

பெண்கள் தொடர்ந்து இஞ்சியினை உட்கொள்ளும்போது, ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகின்றது, என 2014 ம் ஆண்டில் ISRN (Obstetrics and Gynecology) என்ற இதழ் ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.

மேலும் இஞ்சி செரிமான பிரச்சனைகளை அகற்றும், குமட்டல், வாந்தியை தடுக்கிறது.கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதத்தில் வரக் கூடிய வாந்தியினை இஞ்சி டீ யினால் தடுக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது ,உடலில் ஏற்படும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.

கொழுப்பினை கரைக்க இஞ்சி உதவுகிறது. பைல் அமில சுரப்பினை அதிகரிக்கச் செய்து. கொழுப்பு உடலில் தங்காமல் வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது, உடல் பருமனை குறைக்கிறது.

இஞ்சி டீ அதிகமாக உட்கொண்டால் குமட்டல் வாந்தி வரலாம், இரண்டு வயதிற்கு கீழ்ளுள்ள குழந்தைகள் இஞ்சியை எடுத்துக் கொள்ளக் கூடாது. ரத்த சம்பந்தப்பட்ட நோய்யுள்ளவர்கள் இஞ்சியை அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!

BY: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த ஒரு பொருளை கொண்டு இழந்த அழகை இரவில் மீட்கலாம்! எப்படி தெரியுமா?
Next articleஅரிசி கழுவிய நீரில் இவ்வளவு நன்மைகளா? இனிமே கீழே ஊற்றாதீர்கள்!