அரிசி கழுவிய நீரில் இவ்வளவு நன்மைகளா? இனிமே கீழே ஊற்றாதீர்கள்!

0

எமது அன்றாட உணவுகளில் மிக முக்கியமான பங்கு வகிப்பது அரிசி இதனை கழுவிய நீாில் நிறைய விட்டமின்ஸ்,அமினோ ஆசிட்,  மினரல்ஸ் ஆகியன நிறைந்திருப்பதால் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு முக்கிய பங்குவகிக்கிறது. எனவே நாம் அரிசி கழுவிய நீரை எவ்வாறு பயன்படுத்ததலாம் என்பதை பாா்ப்போம்.

பேஷியல் : அரிசி கழுவிய நீரை ஒருபாத்திரத்தில் எடுத்து அதில் காட்டனை துணியை நனைத்து முகத்தை துடைத்து விட்டால் முகம் பளபளப்பாக மாறும்.தினமும் இதை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு : குழந்தைகளை குளிப்பாட்ட அரிசி கழுவிய தண்ணீருடன் இன்னும் கொஞ்சம் தண்ணீரை கலந்து பயன்படுத்தினால் சரும நோய்கள் வராமல் பாதுகாக்கும் அத்துடன் சரும பொலிவையும் நல்ல தூக்கத்தையும் தரும்.

சருமம் : அரிசி கழுவிய நீரில் முகம் கழுவுவதால் பருக்கள் வராது. மேலும் காய்ந்த சருமத்தை  மென்மையாக்கும்.

வயதான தோற்றம் :  சருமம் வறண்டு வயதான தோற்றத்தை                   போக்குவதற்கு தினமும் அரிசி கழுவிய நீரில் கழுவிவந்தால் தளர்ந்திருக்கும் சருமத்தை டைட் செய்திடும்.

ஆரோக்கியமான கூந்தல் : ஆரோக்கியமான கூந்தலை பெற வேண்டுமென்றால் ஷாம்பு, சீயக்காய்  போட்டு  முடியை நன்றாக கழுவிய பின்னா் அாிசி கழுவிய தண்ணீரை கடைசியாக தலைக்கு ஊற்றினால் முடி நீண்டு அடா்த்தியாக வளரும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதினமும் இஞ்சி டீ குடிப்பதால் பெறும் அற்புதமான நன்மைகள்!
Next articleவெண்டைக்காயை ஊற வைத்த நீரைக் குடித்தால் உண்டாகும் அற்புதங்கள் என்ன தெரியுமா?