வெள்ளை நரை முடி போக்கி கரு-கரு புதுமுடி வளர சிறந்த வைத்தியம்!

0

வெள்ளை முடியை இயற்கை முறையில் போக்க சில வழிமுறைகளை காண்போம்.

இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது. இதற்கு சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. மேலும் பலரும் வெள்ளை முடியை மறைக்க பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர, நிரந்தரமாக மறையாது.

அதுமட்டுமின்றி, வெள்ளை முடியை மறைக்க கண்ட கண்ட பொருட்களை வாங்கி தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும் ஏற்படுகின்றன. இருக்கும் முடியும் கொட்டி விடும். எனவே இவற்றையெல்லாம் தவிர்க்க, இயற்கை முறையில் வெள்ளை முடியை எப்படி கருமையாக்குவது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும். ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.

நெல்லிக்காய்: நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால்,வெள்ளை முடி மறைவதை நீங்கள் காண முடியும்.

கறிவேப்பிலை: கறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அததனை தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊற வத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

வெந்தயம்: வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரை முடி மறையும்.

நெய்: நெய் கூட வெள்ளை முடியை மறைய வைக்கும். அதற்கு நெய்யை ஸ்கால்ப்பில் படும் படிநன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும். இந்த முறையால் பலன் சற்று தாமதமாக கிடைக்கும். இருப்பினும் இந்த முறையால் நிரந்தரமாக வெள்ளை முடி வருவதைத் தடுக்கமுடியும்.

மிளகு: தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும்.இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.

ப்ளாக் டீ: 1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்துகலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்துவந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகனடாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்: பெண்கள் கழிவறை சுவற்றில் ஆணின் சடலம்!
Next articleகருவளையம் ஒரே வாரத்தில் மறைய இந்த ஜெல் தடவுங்க!