உங்கள் நரைமுடியை கருகருவென மாற்றும் அரிய மூலிகை… அதிகம் பகிருங்கள்!

0

தலைமுடி உதிர்வதும் நிறம் மாறி நரைப்பதுமே, இன்றைய இளைய வயதினரின் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

இளம் வயதிலேயே, இயல்பான முடியின் கரு நிறம் மாறி நரைத்து விடுகிறது.

நவீன கால வளர்ச்சிகளில், குளிக்கும்போது தலையில் தேய்த்தவுடன் ஏற்படும் நுரையில், தலையில் உள்ள பொடுகுகள் போன்ற தலை பாதிப்புகள் விலக பலவகைப்பட்ட ஷாம்பூக்கள் உபயோகிப்பதால் எண்ணைக் குளியலை இன்றைய தலைமுறையினர் முற்றிலும் புறக்கணித்து விட்டனர்.
எண்ணைக் குளியலை, இன்று வீட்டில் உள்ள பெரியோர் வற்புறுத்தினாலும் யாரும் அதை பொருட்படுத்தாமல், அதெல்லாம் உன் காலம், என கேலி செய்யும் காலமாகிவிட்டது.

தலைமுடி நரைக்க எண்ணைக் குளியலை விட்டது ஒரு காரணம் என்றால், புரதச் சத்து இல்லாத துரித உணவுகள் மற்றொரு காரணமாகி விட்டன.

முடியை கறுக்க வைக்கும் அரிய மூலிகை..

தலைமுடிகள் நரைத்து இருப்பதைக் கட்டுப்படுத்தி, தலைமுடிகளின் வேர்க் கால்களில் உள்ள அணுக்களின் பாதிப்பை சீராக்கி, மீண்டும் மெலனின் உற்பத்தியை அதிகரிக்க வைத்து, தலைமுடியை கறுக்க வைக்கும் ஒரு அரிய மூலிகைதான் கரும்பூலா மூலிகை.

கரும்பூலா செடிகளின் இலைகள் மற்றும் கனிகளில் உள்ள வேதிப்பொருட்கள், நரைப்பதற்கு காரணமான மெலனின் பாதிப்பை சரியாக்கி, தலைமுடிகளை கருப்பாக்குகின்றன.

கரும்பூலா, அவுரி, மருதோன்றி, கறிவேப்பிலை இலைகளை தனித்தனியே இடித்து சாறெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன் கரும்பூலா பழங்கள் மற்றும் நெல்லிக்காயை கொட்டைகள் நீக்கி, சதைப் பகுதிகளை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

சிறிது தேங்காய் எண்ணையில் இவற்றின் இலைகளின் சாற்றையும் கலந்து, அத்துடன் கடுக்காய் சூரணத்தை சிறிதளவு சேர்த்து, ஒரு மண் சட்டியில் இட்டு, வாயை ஒரு வெள்ளைத் துணியால் நன்கு சுற்றி, சூரிய ஒளியில் படுமாறு தினமும் வைக்க வேண்டும்.

இதுபோல ஓரிரு வாரங்கள் வைத்திருந்து, பின்னர் இந்த எண்ணையை வடித்து ஒரு பாட்டிலில் வைத்துக்கொண்டு, தலையில் தேய்த்து நன்கு ஊற வைத்து, அதன்பின் தலையை சிகைக்காய் கொண்டு அலசி குளித்துவர, நரை விலகி, தலைமுடி விரைவில் கருப்பாக மாற ஆரம்பிக்கும். முடி உதிர்வு கட்டுப்படும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த ஒரு பொருள் போதும்? புற்றுநோய் தலைத்தெறிக்க ஓடும்!
Next articleஇந்த இடத்தில் பீரோவை வைத்தால் பண மழை கொட்டுமாம்.