கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும் தக்காளியின் பயன்கள் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

0

தக்காளி ஆரம்ப காலத்தில் நஞ்சுதன்மை உள்ள செடியாகவே கருதப்பட்டது. பின்பு அதன் சுவையை உணர்ந்து சுவைத்து உண்டனர். தற்போது சமையலிலும் கறி, சாம்பார், ரசம், சட்னி என்று உணவில் எல்லாவற்றிற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பழத்தை வேக வைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம், சாறுபிழிந்தும் பருகலாம். நல்ல பலனைத் தரும்.தக்காளியில் பல வகைகள் உண்டு அவை மாட்டுத்தக்காளி, நாட்டுத் தக்காளி, சீமைத்தக்காளி, மணத்தக்காளி, என்று பல வகையான தக்காளிகள் உண்டு.

நாட்டுத் தக்காளியைத்தான் நாம் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறோம். இது உணவுகளுக்கு ருசியையும், நறுமணத்தையும் கொடுக்கிறது.விலையுயர்ந்த கனிகளை வாங்க இயலாதவர்கள், இக்கனியை தினமும் அப்படியே சாப்பிட்டு வந்தாலே போதும் நமது தேகத்திற்கு நல்ல ஆரோக்கியத்தையும் சக்தியையும் தரும்.

உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அயோடின், கந்தகம்,சோடியம் சுண்ணாம்பு, மக்னீஷியம், பொட்டாசியம், இரும்பு போன்ற சத்துக்களும், வைட்டமின் சத்துக்களும் ஏராளமாய் உள்ளன.

இதன் மருத்துவப் பயன்கள்:

கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும்.

இரத்தத்தை சுத்தமாக்கும், கண்கள் ஒளியுடன் திகழ உதவுகிறது.

சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது, நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.

எலும்பை பலமாக்கும், நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

தோலை பளபளப்பாக்கும், இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

பற்களும், ஈறுகளும் வலிமை பெறும்.

மலச்சிக்கலை நீக்கும், வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.

குடற்புண்களை ஆற்றும், களைப்பைப் போக்கும்.

ஜீரண சக்தியைத் தரும் , சொறி, சிரங்கு, சரும நோய்களைப் போக்கும்.

தொற்று நோய்களைத் தவிர்க்கும், தொண்டைப் புண்ணை ஆற்றும்.

தைராய்டு சுரப்பியை சீா்செய்கிறது.

தக்காளியில் உள்ள சத்துக்கள்

இரும்புச் சத்து – 0.1 மி.கிராம்
சுண்ணாம்புச் சத்து – 3.0 மி.கிராம்
வைட்டமின் A – 61 மி.கிராம்

தோல் நோய் குணமாக பழுத்த தக்காளி இரண்டு (அ) மூன்றை எடுத்து, சிறிது சிறிதாக அரிந்து, மிக்ஸியிலிட்டு, ஜூஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால் போதும், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

உடல் சோர்வு நீங்க ‘தக்காளி சூப்’ செய்து பருகினால் சோர்வும், களைப்பும் நீங்கி விடும்.

தக்காளி ஜாம் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பாா்கள்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபருவமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா?
Next articleஇன்று பல தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பு ஏன் தள்ளிப்போகிறது? காரணங்களும். தீர்வுகளும்.