சோற்றுக் கற்றாழையின் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா !

0

சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழை மடல்களின் தோலை நீக்கி, அதன் சதைப் பகுதியை சேகரித்து ஆறேழு முறை அலசிவர, அதன், வீச்சம் நீங்கும். அதனை காலநிலைக்கேற்ப, கோடைக்காலமெனில் வெறுமனே நெல்லிக்காயளவு சாப்பிடலாம், குளிர்காலங்கள் எனில், அத்துடன் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து சாப்பிடலாம்.

இப்படி தொடர்ந்து சாப்பிட்டுவர, உடலில் இரத்தத்தில் கலந்திருந்த நச்சுக்கள் வெளியேறும், உடல் உள் உறுப்புகளின் சூடு குறையும், உடலின் சோர்வு விலகும்.

முகத்தில் உள்ள நச்சுப் பருக்கள் மற்றும் உடல் காயங்கள் ஆறி மறையும், மலச்சிக்கல் நீங்கும், உடலின் அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து உடல் வளமாகும்.

உடலின் இரத்த அழுத்தத்தை சீராக்கும், செரிமானக் கோளாறுகள் காரணமாக ஏற்படும் வயிற்று வலி, நெஞ்செரிச்சல் விலகிவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக, உடலில் புதிய இரத்த செல்களை அதிகரித்து உடல் முதுமையைத் தடுத்து, இளமையை காக்கும் இயல்புடையது.

சோற்றுக் கற்றாழையின் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

நெல்லிக்காய்

தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும் உண்டாகும்.

வெந்தயம்

சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்தயத்தைப் அரைத்து தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம்.

இரவில் தினந்தோறும் நித்திரை வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.

செம்பருத்தி பூ

செம்பருத்தி பூவைக் காயவைத்து தூளாக்கி தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

குப்பை மேனி

மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

அருகம்புல்

அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு எடுத்டுக்கொள்ளுங்கள். அதனுடன் ஐந்து மிளகு மற்றும் நாட்டு வெள்ளைப்பூண்டு இரண்டு சேர்த்துக்கொள்ளுங்கள். இதை மிக்சியில் போட்டு சிரிது சிறிதாக நீர் விட்டு குறைந்த வேகத்தில் அரைத்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு இதனை நன்கு வடிகட்டி இனிப்பு தேவையான அளவு அல்லது தேன் சேர்த்து சாற்றினை தயாரிக்கலாம்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட சாற்றினை, அதிகாலையில் வெறும் வயிற்றில் சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும். பருகிய பின் அரை மணி நேரத்துக்கு எந்த விதமான உணவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. அப்பொழுதுதான் இதனுடைய முழுப்பயனும் நாம் பெற முடியும்.

அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன் உடல் உஷ்ணமும் தணியும்.

உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

இரத்த கொதிப்பு

இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலையும் மாலையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமாதுளம்பழம் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வராது!
Next articleகடும் எச்சரிக்கை! கொழும்பில் இன்று நடந்த மிக மோசமான சம்பவம்!