கடும் எச்சரிக்கை! கொழும்பில் இன்று நடந்த மிக மோசமான சம்பவம்!

0

சிறிலங்கவில் ஏற்பட்டிருக்கும் அரசியற் குழப்பங்களுக்கு மத்தியில் இன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

ஒக்டோபர் 31ஆம் திகதியான இன்றைய தினம் புதன் கிழமை கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பமானது முதல் பங்குச் சந்தை வர்த்தகம் தொடர் வீழ்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது.

எவ்வாறாயினும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்ததையடுத்து ஏற்படுத்தபட்டிருந்த அரசியற் குழப்பத்துக்கு மத்தியிலும் நேற்று முந்தினம் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கொழும்பு பங்குச் சந்தை வர்த்தகம் அபரிமிதமான உயர்வை காண்பித்திருந்தது.

இந்த திடீர் உயர்வு மைத்திரி மகிந்த அரசாங்கத்துக்குச் சார்பான முதலீட்டாளர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ள பங்குச் சந்தை ஆய்வாளர்கள் தற்போது அவர்களால் தொடர்ந்தும் இதனைச் செய்யமுடியாததாலேயே உண்மையான நிலைமையை வெளிப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பிரதமர் பதவியிலிருந்த ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக நீக்கியதை அடுத்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தம்வசம் இருக்கும் பங்குகளை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விற்றுவருவதாகவும் கொழும்பு பங்குச் சந்தை முகவர்கள் உறுதி செய்திருக்கின்றனர்.

இதேவேளை, சிறிலங்கா அரசியலில் ஏற்பட்டிருக்கிற குழப்பகரமான நிலைமை வெளிநாட்டு முதலீடுகளில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருப்பதாக பங்குச் சந்தை தர நிருணய அமைப்புக்களாக கருதப்படும் மூடி மற்றும் பிச் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன.

பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியமை சிறிலங்காவின் பொருளாதாரத்திலும் வெளிநாட்டு முதலீடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருபதாகவும் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்புக்கள் இந்த நிலைமையை கூடிய விரைவில் மாற்றிக்கொள்ளாவிட்டால் மேலும் மோசமடையலாம் எனவும் எச்சரித்துள்ளன.

இந்த நிலையிலேயே கொழும்பு பங்குச் சந்தை அனைத்துப் பங்குகளின் சுட்டெண் 0.34 வீதத்தால் வீழ்ச்சியைப் பதிவுசெய்திருக்கிறது.

இதேவேளை, சிறிலங்கா ரூபாவின் பெறுமதியும் தொடர்ந்தும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது. இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி 175ஆக பதிவாகியிருக்கிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசோற்றுக் கற்றாழையின் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா !
Next articleMe too பாலியல் சர்ச்சை! இயக்குனரால் இளம் நடிகையின் ஆடை கிழிப்பு! அழுதுகொண்டே ஓடிய நடிகை!