சூட்டு கொப்பளங்கள் ( வேனல் கட்டிகள் ) மறைய எளிய வைத்தியம்!

0

வேனல் கட்டிகள்!
வியர்க்குருவிற்கு அடுத்தபடியாக கோடை காலத்தில் பலருக்கும் வரும் தொல்லை, தோலில் தோன்றும் கட்டிகளாகும். பொதுவாக வியர்வை அதிகமுள்ள இடங்களில்தான் இக்கட்டிகள் அதிகம் வருகின்றன. தொடர்ந்து தோலில் உராய்வு இருக்கும் பகுதிகளிலும் இக்கட்டிகள் அதிகம் வரும். ஆண்களுக்கு சட்டை காலர், கழுத்தில் உராய்ந்து கொண்டேயிருப்பதால் அந்தப் பகுதியில் கட்டிகள் அதிகம் வருகின்றன. வேனல்கட்டிகள் வந்தால், அவற்றை பிதுக்கி சீழை வெளியேற்ற முயற்சி செய்ய வேண்டாம். அவ்வாறு செய்யும்போது நோய்க் கிருமிகள் பக்கத்து திசுக்களுக்கு பரவிவிடும் அபாயம் உண்டு.

வேனல் கட்டிகள் மறைய எளிய வைத்தியம்.!
சீரகத்தை தண்ணீர் விட்டு மைபோல் அரைத்து, கட்டி உள்ள இடத்தில் தடவ, கட்டிகள் மறையும். அல்லது சிறிய வெங்காயம், பூண்டு இரண்டையும் சேர்த்து இடித்து சாறு எடுத்து அதை கட்டியின்மீது தொடர்ந்து தடவி வர கட்டிகள் கரையும். ஒரு நாளில் 4-5 முறை தடவவும். இல்லையென்றால், ஒரு தேக்கரண்டி பாலேடுடன் ஒரு தேக்கரண்டி வினிகர், ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கட்டிகளின் மேல் தினம் 3-4 முறை தடவினால் கட்டிகள் மறையும்.

வேனல் கட்டிகள் வராமல் தடுக்க.!
கோடைகாலத்தில் தினமும் இருமுறை குளிர்ந்த நீரில் உடலை சுத்தம் செய்யுங்கள். இறுக்கமான உடைகள் அணிய வேண்டாம். மென்மையான சோப்புகளையே உபயோகியுங்கள். இயற்கையான பானங்களான, இளநீர், மோர், எலுமிச்சை சாறு, கரும்பு சாறு போன்றவை அதிகமாக குடியுங்கள். இவை உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். குறிப்பாக, வெயிலில் வெளியே செல்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். வெளியில் செல்லும் அவசியம் ஏற்பட்டால், குடையை எடுத்துச் செல்லுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநடைப்பயிற்சி (வாக்கிங்) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்கள் ஆனால் சரியான முறையில் நடைப்பயிற்சி செய்வது எப்படி என்று தெரியுமா?
Next articleஆஸ்துமா நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமான குங்குமப் பூ பற்றி அறியாத மருத்துவ குணங்கள்!