சிவபெருமான் ஏன் மரணத்தின் கடவுளான எமதர்மனை மார்பில் மிதித்து கொன்றார் தெரியுமா!

0

சிவபெருமானுக்கு காலகண்டன் என்ற ஒரு பெயர் உண்டு. அதற்கு அர்த்தம் மரணத்தையே முடிப்பவர் என்பதாகும். ” காலனை கண்டால் காலால் உதைப்பவர் ” காலகண்டன் ஆவார். முதலும், முடிவும் அற்ற ஈசனால் காலத்தையும், மரணத்தையும் கட்டுப்படுத்த கூடியவர் ஆவார்.பாவம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க சிவபெருமானால் நியமிக்க பட்டவரே மரணத்தின் கடவுளான எமதர்மன் ஆவார்.

தன்னால் நியமிக்கப்பட்ட எமதர்மனை தானே கொல்லும் சூழ்நிலை ஒருமுறை சிவபெருமானுக்கு ஏற்பட்டது. தனது தீவிர பக்தனான மார்க்கண்டேயனை எமதர்மனிடம் இருந்து காப்பாற்ற எமதர்மனை கொன்று அவரின் மேல் நடனமாடினார் சிவபெருமான். இந்த பதிவில் சிவபெருமான் எப்படி மார்க்கண்டேயனை கொன்றார், அதற்கு பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

கோவில்கள்
கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் காலசம்ஹார மூர்த்தி என்னும் கோவில் உள்ளது. இந்த கோவிலில் எமதர்மனை மிதித்து அதன் மேல் நடனமாடுவது போல சிவபெருமான் எழுந்தருளியிருப்பார். அதேபோல தமிழ்நாட்டில் திருக்கடவூரில் இதே கோலத்தில் கலாந்தக மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இது மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பல கோவில்களில் கலாந்தக மூர்த்தியின் சிலை எழுந்தருளியுள்ளார்.னை கொன்றார், அதற்கு பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

மார்க்கண்டேயரின் பாதுகாவலர்
சைவ சமயத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதை என்னவெனில் மார்க்கண்டேயரின் கதை ஆகும். சிவபெருமானின் தீவிர மிகண்டு முனிவர் தன் தவத்தின் பலனாக ஈசனிடம் தனக்கு ஒரு மகனை தரும்படி வரம் கேட்டார். அதற்கு சிவபெருமான் உனக்கு 16 ஆண்டுகள் வாழும் புத்திசாலி மகன் வேண்டுமா அல்லது 100 ஆண்டுகள் வாழும் முட்டாள் மகன் வேண்டுமா என்று வினவினார். அதற்கு மிகண்டு முனிவர் 16 ஆண்டுகள் வாழும் புத்திசாலி மகனை தேர்ந்தெடுத்தார்.

மகாமிர்துஞ்சய மந்திரம்
மார்க்கண்டேயர் தனது பதினைந்தாவது வயதில் இருந்த போது பிரம்மதேவர் அவருக்கு மகாமிர்துஞ்சய மந்திரம் என்னும் மந்திரத்தை போதித்தார். இந்த மந்திரம் மரணத்தை வென்று நீண்ட காலம் வாழ உதவும். பிரம்மாவின் அறிவுரைப்படி மார்க்கண்டேயர் சிவபெருமானை வழிபட தொடங்கினார். தற்சமயம் திருக்கடவூரில் இருக்கும் வில்வவனம் என்னும் இடத்தில் இருக்கும் சிவலிங்கத்தை வழிபடும் படி அடையாளம் காட்டப்பட்டார்.

எமனால் மார்க்கண்டேயரின் உயிரை எடுக்க இயலவில்லை
எமதர்மனின் ஆணைக்கிணங்க எமதூதர்கள் மார்கண்டேயனின் உயிரை எடுத்து செல்ல வந்தார்கள். ஆனால் மார்க்கண்டேயர் தொடர்ந்து சிவபெருமானின் பெயரை கூறிக்கொண்டிருந்ததால் அவரின் உயிரை எடுக்க இயலவில்லை. எனவே எமதர்மனே மார்கண்டேயனின் உயிரை எடுக்க நேரில் வந்தார், மார்கண்டேயரிடம் ” உனது விதிப்படி உயிரை எடுக்க வேண்டும் சிவனின் நாமத்தை உச்சரிப்பதை நிறுத்து ” என்று கூறினார்.

எமன் மார்கண்டேயரை நிறுத்தினார்
எமனின் ஆணையை மார்க்கண்டேயர் மறுத்தார், இதனால் கோபமுற்ற எமதர்மன் சிவபெருமான் மீது கோபமுற்றார். சிவபெருமானால் கூட தன்னை தடுக்க முடியாது என்று மார்கண்டேயரை எச்சரித்தார். மார்க்கண்டேயரின் உயிரை எடுக்க அவரை நெருங்கினார்.

சிவன் எமனை வதைத்தார்
கோபமடைந்த எமதர்மர் பெரிய உருவத்தை எடுத்து மார்கண்டேயரை சிறைபிடிக்க தனது பாசக்கயிறை வீசினார். மார்க்கண்டேயர் சிவலிங்கத்தை இறுக கட்டிக்கொண்டார். சிவலிங்கத்தின் மீது எமனின் பாசக்கயிறு விழுந்தவுடன் சிவபெருமான் தோன்றினார். தனது திரிசூலத்தினால் தடுத்து எமதர்மனின் மார்பில் மிதித்தார். மரணத்தின் கடவுளான எமதர்மன் சிவனால் கொல்லப்பட்டார்.

பாதுகாவலன் ஈசன்
முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் என அனைவரும் சிவபெருமானை வந்து வணங்கினார்கள். சிவபெருமான் மார்கண்டேயருக்கு ஏழு கல்பம் வரை 16 வயதிலேயே இருக்கும்படி வரம் கொடுத்தார். ஆனால் எமதர்மன் கொல்லப்பட்டதால் பூமியில் இனி யாரும் இறக்க மாட்டார்கள் அதனால் பூமியில் தீயசக்திகள் அதிகரித்து விடும் என்று அனைவரும் ஈசனிடம் முறையிட்டனர்.

சிவன் எமனுக்கு மீணடும் உயிர் கொடுத்தார்
தேவர்கள் அனைவரும் எமதர்மனுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும்படி வேண்டுகோள் வைத்தனர். இன்னொரு முறை மீண்டும் எமதர்மனை தன் பாதத்தால் வருடியதன் மூலம் எமதர்மனுக்கு மீண்டும் உயிர்க்கு கொடுத்தார். சிவபெருமானிடம் தன் தவறுக்காக வருந்தி மன்னிப்பு கேட்டார் மரணத்தின் கடவுளான எமன்.

மகா, மிர்துன், ஜெயா
சிவபெருமானை வழிபடும் மிகவும் சக்திவாய்ந்த மந்திரங்களில் ஒன்று இந்த மகாமிர்துஞ்சய மந்திரமாகும். மகா என்பதன் பொருள் பெரிய, மிர்துன் என்பதன் பொருள் தெய்வம் மற்றும் ஜெயா என்பதன் பொருள் வெற்றி என்பதாகும். முடிவில் இது மரணத்தை வெற்றிகொள்பவர் என்பதன் அர்த்தம் ஆகும். இதனை ருத்ர மந்திரம் என்றும் கூறுவார்கள். சிவபெருமானை வழிபடுவர்களிடம் இருந்து மரணம் தள்ளியே இருக்கும் என்தை இந்த நிகழ்வு விளக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆரோக்கியம் தரும் அருகம் புல்!
Next articleகண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த ஜீரணிக்கமுடியாத காட்சி! கடைசி நொடியில் நிகழ்ந்தது என்ன!