சாப்பிட்டால் விஷமாக மாறும் 6 உணவுகள்! இதை எல்லாம் நியூட்ரிஷியன்கள் சாப்பிடவே மாட்டாங்களாம்! அதிர்ச்சியில் ஆராச்சியாளர்கள்!

0

நமது ஆரோக்கியத்தில் உணவுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தினமும் சரிவிகித உணவை சாப்பிட வேண்டும் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

ஆனால் அப்படிப்பட்ட உணவுகள் கூட சில நேரங்களில் நமக்கு நஞ்சாக மாறிவிடும் என்கிறார்கள்.

ஒரு சில உணவுகளை நாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது அவர்களின் கருத்து. சில ஊட்டச்சத்து உணவுகள் கட நமக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.

அந்த வகையில் இந்த 6 உணவுகளை எடுத்துக் கொண்டால் உடம்புக்கு விசம் என்று எச்சரிக்கை விடுவிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

ஹாட் டாக்ஸ், பன்றிக் கறி மற்றும் சாஸ்

இந்த மாதிரியான பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை எடுத்துக் கொள்வதை தவிருங்கள். இந்த மாதிரியான பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி மற்றும் கெட்ச் அப் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது புற்றுநோய், இதய நோய்கள் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளான பெப்பரோனி, ஹாட் டாக், பன்றி இறைச்சி மற்றும் டெலி இறைச்சிகள் போன்ற உணவுகளை தவிருங்கள். பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி ஹாட் டாக்ஸ் உணவுகளை இனி சாப்பிடாதீர்கள் என்கின்றனர்.

அதே நேரம் ஒரு சிப்ஸ் பாக்கெட்டை எடுத்தால் கூட அதன் கலோரிகளை கவனியுங்கள். 100 கலோரிக்கு மேல் இருப்பது உடம்புக்கு நல்லது கிடையாது.

நீரிழிவு நோய்

அதே மாதிரி இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருக்கும் மற்றொரு விஷயம் சோடியம். அமெரிக்க ஊட்டச்சத்து அமைப்பு தகவல் படி ஒரு நாளைக்கு 2300 மி. கி குறைவாக உப்பு எடுத்துக் கொண்டால் போதும்.

51 வயதாகி விட்டால் 1500மி.கி போதுமானது. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அதிகளவு உப்பு மிகுந்த உணவை எடுத்துக் கொள்வதால் தான் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

சர்க்கரை மிகுந்த காபி

இப்பொழுது எங்கு பார்த்தாலும் காபி ஷாப் தான் காணப்படுகிறது. இங்கே தயாரிக்கப்படும் காபி களில் 400 கலோரிகளும், 15 டீ ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து கொடுக்கின்றனர் என்று ஜோஹன்னா சிக்முவாரா, MS, அன்றாட உடல்நலம் பற்றிய எழுத்தாளர் இது குறித்து கூறுகிறார்.

இந்த மாதரி அதிகமாக சர்க்கரையை அமெரிக்கர்கள் உணவில் சேர்த்து வருவதால் தான் இருமடங்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பை பெறுகின்றனர் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க இதய சங்கம் கருத்துப் படி ஒரு நாளைக்கு 6 டீ ஸ்பூன் அல்லது 100கலோரிகளுக்கு மேல் பெண்கள் சர்க்கரையை எடுத்துக் கொள்ள கூடாது எனவும், 9 டீ ஸ்பூன் அல்லது 150 கலோரிகளுக்கு மேல் ஆண்கள் எடுத்துக் கொள்ள கூடாது எனவும் தெரிவித்து உள்ளனர்.

உங்களால் உங்களுக்கு பிடித்த காபி பானம் இல்லாமல் இருக்க முடியவில்லை என்றால் குறைந்தளவு எடுத்துக் கொள்ளுங்கள். எப்பயாவது உங்களுக்கு பிடித்த ஸ்வீட் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சிக்முவாரா கூறுகிறார்.

மார்க்கரைன்ஸ்

சகிமுரா மற்றும் டப் டிக்ஸ் நிபுணர்கள் கூறுகையி்ல் அவர்கள் கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். இது உங்கள் கெட்ட எல்டிஎல் கொலஸ்ட்ராலை அதிகரித்து இதய நோய்களுக்கு வழி வகுத்து விடும்.

அதே நேரத்தில் நல்ல கொழுப்புகளை குறைத்து விடும். எனவே ஹைட்ரோஜெனரேட்டேடு ஆயில் போன்ற கொழுப்புகளை உண்ணாதீர்கள் என்று சகிமுரா கூறுகிறார். அமெரிக்க இதய சங்கம் கருத்துப் படி குறைந்த அளவு டிரான்ஸ் கொழுப்புகளை எடுத்துக் கொள்வது உங்கள் கலோரிகளை குறைக்க வாய்ப்புள்ளது.

எனவே தினமும் 2000கலோரிகள் எடுத்துக் கொண்டால் 20 கலோரிகள் மட்டும் கொழுப்புச் சத்து போதுமானது. இதற்கு இயற்கையான விலங்குகளின் இறைச்சியே போதுமானது. அதிகளவு பாக்கெட் உணவுகளை எடுப்பது உங்கள் கலோரிகளை அதிகப்படுத்த வாய்ப்புள்ளது.

அதே மாதிரி நிறைய குக்கீஸ் வகைகளில் அதிக அளவில் பட்டர் சேர்க்கப்படுகிறது. இந்த பட்டர் அதிகளவில் டிரான்ஸ் கொழுப்புகளை கொண்டு இருப்பதால் உடல் நலம் மோசமடைய வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பதப்படுத்தப்பட்ட பாஸ்ட்ரீஸ்

மவ்ரீன் நாங்கோங்கோ, எம்எஸ், ஆர்.டி. என்ற சுகாதார ஊட்டச்சத்து வல்லுநர் பாப் டார்ஸ், டிவிங்கிஸ், டெவில் டாக்ஸ் கப் கேக்ஸ் போன்றவற்றை சாப்பிடாதீர்கள் என்கிறார்.

இந்த ஸ்நாக்ஸ் வகைகளில் சுவைக்காக நிறைய கெமிக்கல்கள் சேர்க்கப்படுகிறது. எனவே இந்த மாதிரியான உணவுகளை தவிர்த்து , பழங்கள், காய்கறிகள், நட்ஸ், தானியங்கள், இறைச்சிகள், மீன்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகள்

இதுவும் மற்றொரு வகையான டிரான்ஸ் கொழுப்புகள் ஆகும். இந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்கிறார் சகிமுரா. எனவே குளிர்விக்கப்பட்ட ஸ்வீட், டிசர்ட் வகைகள் நல்லது அல்ல.

இந்த மாதிரியான செயற்கை டிரான்ஸ் கொழுப்பு உணவுகளை உணவு கட்டுப்பாடு வாரியம் தடை செய்துள்ளது என்றும் சகிமுரா கூறுகிறார்.

எனவே பாக்கெட் உணவுகளில் டிரான்ஸ் கொழுப்பு ஒன்று ஜூரோவாக அல்லது 0.5 கிராம் என்ற அளவில் இருக்க வேண்டும் என்று உணவு கட்டுப்பாடு வாரியம் கூறியுள்ளது. பாக்கெட்டில் உள்ள கலோரி பட்டியலை வாசித்து பயன்படுத்துங்கள்.

ஹைட்ரோஜெனரேட்டேடு கொழுப்பு அல்லது டிரான்ஸ் கொழுப்பு அளவை கவனிக்க வேண்டும் என்று டப் டிக்ஸ் கூறுகிறார்.

சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள்

நாம்கூங் கூறுகையில் சர்க்கரை சேர்க்கப்பட்ட தானியங்களில் குறைந்த அளவே நார்ச்சத்து இருக்கும். இது உங்களுக்கு அந்தளவுக்கு பசியை தீர்க்காது. எனவே உங்கள் கலோரிகளை கணக்கிட்டு எதாவது டிசர்ட் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று நாம்கூங் கூறுகிறார்.

உங்களுக்கு சர்க்கரை சேர்க்கப்பட்ட தானியங்கள் பிடிக்கும் என்றால் கடைகளில் அடைக்கப்பட்ட உணவுகளை வாங்காமல் வீட்டிலேயே தானியங்களை எடுத்து அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பயன்படுத்துங்கள். என்று டப் டிக்ஸ் கூறுகிறார்.

உணவு மாற்றம்
  • நீங்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிட நினைத்தால் ஊட்டச்சத்து நிபுணரை ஆலோசியுங்கள். அவர்கள் உங்களுக்கான உணவுப் பட்டியலை பரிந்துரைப்பார்கள் என்று டப் டிக்ஸ் கூறுகிறார்.
  • உங்களுடைய உணவை பாதி ஆரோக்கியமான உணவாகவும் பாதி பிடித்த உணவாகவும் மாற்றி உண்ணுங்கள். உதாரணமாக உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் உப்பு சேர்க்கப்பட்ட உணவை தவிர்ப்பது நல்லது.
  • அப்படி முடியாத பட்சத்தில் பாதி உப்பு சேர்க்கப்பட்ட நட்ஸ் மற்றும் பாதி உப்பு சேர்க்கப்படாத நட்ஸ் என்று கலந்து கொள்ளுங்கள் என்று டப் டிக்ஸ் கூறுகிறார். இப்படி உங்கள் உணவை டைலுயூட் பண்ணி சாப்பிடும் போது காலப்போக்கில் ஆரோக்கியமான உணவின் சுவைக்கு மாறி விடும்.
  • இதன் மூலம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தில் இருந்து வெளிவந்து விடலாம்.
  • உங்கள் ஆரோக்கியம் உணவு பற்றியது மட்டும் இல்லை, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பது பற்றியும் கூட என்று உணர்ந்து செயல்படுங்கள் என்று டப் டிக்ஸ் ஆலோசனை கூறுகிறார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉயிரை பறிக்கும் பணக்கார பிஸ்கட்டுகள்! இனிய யாரும் நம்பி சாப்பிட வேண்டாம்!
Next articleபொடுகை உடனடியாக போக்கி முடி உதிர்வை தடுக்க நெய்யுடன் இதை கலந்து தடவுங்க! ஜப்பானியர்களின் ரகசியம் இது!