சரும நோய்கள், வெண்படலம், மலச்சிக்கல், வீக்கங்கள், பால் சுரப்பு என்பவற்றுக்கு சிறந்த நிவாரணி இலுப்பை ! இலுப்பை மரத்தின் மருத்துவப் பயன்கள்!

0

மரங்கள் நிழலழித்தல், உயிர்களும் சுவாசிக்கக்கூடிய பிராண வாயுவை உற்பத்தி செய்தல், புவி வெப்பத்தைக் குறைத்து மழையை பொழிவித்தலுக்கு மேலாக மனிதனுக்கு மருந்தாகவும், காய்ந்த மரம் விறகாகவும், வெட்டிய மரம் வீட்டு உபயோகப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற வகையில் மனித வாழ்வில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் கண்மாய், ஏரி, குளம், கரைகளிலும் மற்றும் பூங்கா போன்ற இடங்களிலும் சாலை ஓரங்களிலும் பரந்து விரிந்து காணப்படும்இலுப்பை மரமும் ஒன்றாகும்.

இது இந்தியா, இலங்கை மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் அதிகளவில் வளர்கிறதுடன், இதன் இலை, பூ, காய், பழம், வித்து, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை மற்றும் வேர்ப்பட்டை என அனைத்து பகுதிகளுமே மருத்துவப் பயன் கொண்டமைவதனால், இலுப்பை மரத்தினை இருப்பை, சூலிகம் மற்றும் மதூகம் என்ற வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டு வருகின்றது.

பால் சுரக்க

இலுப்பை இலையை மார்பில் வைத்துக் கட்டி வரும் போது தாய்ப்பால் நன்கு சுரப்பு அதிகரிக்கும்.

இலுப்பைக் காய்

இலுப்பைக் காயை கீறும் போது வரும் பாலை உடலில் உள்ள வெண் படலங்களின் மீது தடவும் போது வெண்படலம் விரைவில் குணமடையும்.

இலுப்பைப் பழம்

நல்ல இனிப்புச் சுவை உடைய இலுப்பைப்பழம் மலச்சிக்கலை நீக்கும்.

விதை

இலுப்பை விதையின் ஓட்டை அகற்றி உள்ளே உள்ள பருப்பை நன்கு வதக்கி அரைத்து வீக்கங்களுக்கு கட்டி வரும் போது வீக்கங்கள் குணமடையும்.

நெய்(எண்ணெய்)-பிண்ணாக்கு

இலுப்பையின் விதை கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெய் உடலுக்கு வலிமையையும் அழகையும் கொடுப்பதுடன், எண்ணெய் நீக்கப்பட்ட சக்கையாகிய பிண்ணாக்கினை நன்கு ஊறவைத்து நன்றாக அரைத்து வடிகஞ்சியுடன் சேர்த்து உடலில் தேய்த்துக் குளித்து வரும் போது சரும வியாதிகள் நீங்கும். இதனையே நம் முன்னோர்கள் சோப்பிற்குப் பதிலாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

வேர்

இலுப்பையின் வேரை நன்கு இடித்து நீரில் கலந்துநன்கு கொதிக்கவைத்து குடிநீராக அருந்தி வரும் போது மேற்கண்ட நோய்கள் குணமாகும்.

Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleMillet Benefits in Tamil Siruthaniyam Payangal Cereals Benefits in Tamil சிறுதானிய பயன்கள் சிறுதானிய வகைகள் Siruthaniyangal சிறுதானிய அரிசி Millet Vagaigal
Next articleசுவையான புதினா புலாவ் செய்வது எப்படி