கொழுப்பைக் குறைக்க வெள்ளரிக்காயை இவற்றோடு சேர்த்து சாப்பிடுங்கள்!

0

கோடைகாலத்தில் அனைவருக்கும் உகந்த வெள்ளரிக்காயில் விட்டமின் சி, கே, பீட்டா கரோடின், பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடென்ட் போன்ற முக்கிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

எனவே வெள்ளரிக்காயுடன் மற்ற காய்கள் மற்றும் பழங்களையும் சேர்த்து நீர் வடிவில் குடித்து வந்தால், நமது உடம்பின் செல்சிதைவை தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது. உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளையும் கரைக்கிறது.

வெள்ளரி – எலுமிச்சை நீர்

வெள்ளரிக்காய், எலுமிச்சை, புதினா இலை, தேவையான அளவு உப்பு மற்றும் அதிக நீர் ஆகிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஜூஸ் செய்து, ப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, பின் குடிக்க வேண்டும்.

இதனால் நமது உடம்பில் உள்ள கொழுப்பைக் குறைத்து, கல்லீரலின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, அதிகப்படியான சூட்டை தணிக்கிறது.

வெள்ளரி – திராட்சை நீர்

வெள்ளரி, பச்சை திராட்சை, எலுமிச்சை அகிய அனைத்தையும் தேவையான அளவு எடுத்து அதில் அதிக தண்ணீர் சேர்த்து ஜூஸ் செய்து, ப்ரிட்ஜில் வைத்து, சில மணி நேரம் கழித்து, அதில் மிளகுத்தூளை தூவி குடிக்க வேண்டும்.

இதனால் நமது சருமத்தை பாதுகாத்து, சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, இன்சுலின் சுரப்பை சரி செய்து, மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்துகிறது.

வெள்ளரி – இளநீர்

வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை இலையை பொடியாக நறுக்கி, சீரகத்தை வறுத்து 2 ஸ்பூன் அளவு பொடி ஆகிய இரண்டு கலவையையும் அரைத்து, அதனுடன் இளநீரை ஊற்றி, அரை மணி நேரம் கழித்துக் குடிக்க வேண்டும்.

இதனால் நமது உடம்பிற்கு, அதிகமான நீர்ச்சத்துக்கள் கிடைத்து, புற்றுநோய் மற்றும் முதுமை நிலமைகள் வராமல் தடுக்கிறது.

இவற்றைத் தொடர்ந்து பின்பற்றி வந்தால் கோடைகாலத்தில் உண்டாகும் சரும வறட்சியைத் தடுப்பதோடு, உடலில் இடுப்பு, கையின் கீழ்ப்பகுதி, தொடை ஆகிய அதிகமாக கொழுப்பு தேங்கியிருக்கும் இடங்களில் உள்ள கொழுப்புகளைக் கரைத்துவிடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவீட்டில் பூஜை செய்வதற்கு முன்பு இதெல்லாம் செய்யுங்க உங்க வாழ்க்கை சிறப்பாக இருக்கும்!
Next articleஒரே வாரத்தில் நாள்பட்ட இருமலை குணப்படுத்த இத ட்ரை பண்ணுங்க!