வீட்டில் பூஜை செய்வதற்கு முன்பு இதெல்லாம் செய்யுங்க உங்க வாழ்க்கை சிறப்பாக இருக்கும்!

0

பொதுவாக நாம் அனைவரும் வீட்டில் பூஜை செய்வோம். அனால் அப்படி பூஜை செய்வதற்கு முன்பு முறைப்படி நாம் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

பூஜைக்கு முன்பு சுவாமி படங்களையும் பூஜை அறையையும் துடைக்கவேண்டும். தினமும் இல்லாவிட்டாலும் வாரம் ஒரு முறையாவது துடைக்கவேண்டும்.

சுவாமிக்கு சாம்பிராணி காட்டும் தூபக்கரண்டியை சுவாமியின் இடதுபுறம் வைக்க வேண்டும். அதே போல் கற்பூரத்தட்டை வலதுபுறம் வைக்கவேண்டும்.

பழம் ஏதாவது இருந்தால் அதை இடதுபுறம் பலகாரங்கள் இருந்தால் அதை வலதுபுறமும் வைக்கவேண்டும்.

விளக்கை தினமும் சுத்தப்படுத்தி எண்ணெய் ஊற்ற வேண்டும். பெரிய விளக்காக இருந்தால் வாரம் ஒருமுறை சுத்தப்படுத்தலாம்.

பழைய தீர்த்தத்தை கால்படாத இடத்தில் பூச்செடிகளுக்கோ இல்லை வேறு எங்கேயோ ஊற்றிவிட்டு புது தீர்த்தத்தை வைக்கவேண்டும்.

சுவாமிக்கு ஆரத்தி காட்டும்போது ஸ்லோகங்களையோ இல்லை கடவுளின் நாமங்களையோ சொல்லிக்கொண்டே ஆரத்தி காட்டலாம்.

கூட்டு பிராத்தனை எப்போதும் நல்ல பலனை தரும் ஆகையால் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து பிராத்தனை செய்து பாடல்கள் பாடி இறைவனை மகிழ்விக்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇரத்த அழுத்தம் ம‌ற்றும் கொலஸ்ட்ரால் குறைய இந்த இயற்கை வைத்தியத்தையை மேற்கொள்ளுங்கள் நல்ல பலன் கிடைக்கும்!
Next articleகொழுப்பைக் குறைக்க வெள்ளரிக்காயை இவற்றோடு சேர்த்து சாப்பிடுங்கள்!